அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் – பகுதி 4!

61

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் – பகுதி 4!

 1. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவ மன்னன் – மகேந்திர பல்லவன்.
 2. சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் – தத்புருஷ முகம் (கிழக்கு நோக்கிய முகம்)
 3. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை? எட்டு
 4. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது? மாசி தேய்பிறை சதுர்த்தசி
 5. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்? 4 கால அபிஷேகம்
 6. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம் – நமசிவாய
 7. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்? சிவாயநம
 8. சிவசின்னங்களாக போற்றப்படுபவை – திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)
 9. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை? அருவுருவம்
 10. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம் – ராமேஸ்வரம்
 11. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம் -தட்சிணாமூர்த்தி
 12. கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்? – 12
 13. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில் குற்றாலம் குற்றாலநாதர் கோயில்.
 14. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம் – வில்வமரம்
 15. அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி – மானசரோவர்
 16. திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? -81
 17. பதிகம் என்பதன் பொருள் – பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு
 18. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல் – சிவஞானபோதம்
 19. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை – டமருகம் அல்லது துடி
 20. அனுபூதி என்பதன் பொருள் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல்