அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் – பகுதி 5!

44

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் – பகுதி 5!

 1. உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பி கை – மதுரை மீனாட்சி அம்மன்.
 2. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர் – மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை
 3. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர் – தடாதகைப் பிராட்டி
 4. பழங்காலத்தில் மதுரை என்று அழைக்கப்பட்டது – நான்மாடக்கூடல், ஆலவாய்
 5. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம் – கடம்ப மரம்
 6. மீனாட்சி ஆக இருப்பதாக ஐதீகம் – கடம்பவனக் குயில்
 7. மீனாட்சி கல்யாணத்தை நடத்தி வைக்கும் பெருமாள் – திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப் பெருமாள்
 8. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் – குமரகுருபரர்
 9. மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர் – மகாகவி காளிதாசர்
 10. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள் – சித்ராபவுர்ணமி
 11. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர் – ரோஸ் பீட்டர்
 12. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்? – ஜுரகேஸ்வரர்
 13. “நாயேன்’ என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்? -மாணிக்கவாசகர்
 14. தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர் – இறையனார் (சிவபெருமானே புலவராக வந்தார்)
 15. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம் – சூலைநோய் (வயிற்றுவலி)
 16. அம்பிகைக்கு உரிய விரதம் – சுக்கிரவார விரதம் (வெள்ளிக்கிழமை)
 17. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம் -தோணியப்பர் (சீர்காழி)
 18. தாசமார்க்கம்’ என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர் – திருநாவுக்கரசர்
 19. “தம்பிரான் தோழர்’ என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர் – சுந்தரர்
 20. திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர் – சேக்கிழார்

Also Read This: அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் – பகுதி 4!