அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் – பகுதி 7!

38

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் – பகுதி 7!

Also Read This: அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் – பகுதி 6!

 1. “ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்’ என்று பாடியவர் – சுந்தரர்
 2. “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று போற்றியவர் – மாணிக்கவாசகர்
 3. “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர் – திருமூலர்
 4. “உழைக்கும் பொழுதும் அன்னையே’ என்று ஓடி வரும் அருளாளர் – அபிராமி பட்டர்
 5. ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர் – குலசேகராழ்வார்
 6. திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர் – இடைக்காட்டுச்சித்தர்
 7. கோயில் என்பதன் பொருள் – கடவுளின் வீடு, அரண்மனை
 8. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள் – சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
 9. சித்தாந்தத்தில் “சஞ்சிதம்’ என்று எதைக் குறிப்பிடுவர்? – முன்வினைப்பாவம்
 10. கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்? – சிவபெருமான்
 11. சிவபெருமானுக்கு பிரியமான வேதம் – சாமவேதம்
 12. நமசிவாய’ மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர் – ஆனாய நாயனார்
 13. யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்? – பாணபத்திரர்
 14. அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம் – திருவையாறு
 15. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர் – ராஜராஜசோழன்
 16. சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் – சோமாஸ்கந்தர்
 17. கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல் – விநாயகர் அகவல்.
 18. மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர் -மூர்த்திநாயனார்
 19. நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம் – காளஹஸ்தி
 20. அன்னத்தின் பெயரோடு சேர்த்து வழங்கப்படும் தலம் – திருச்சோற்றுத்துறை (திருவையாறு அருகில் உள்ளது)
 21. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான் – மதுரை சொக்கநாதர்