அப்பா – மகன் சண்டை தீர வழிபட வேண்டிய கோயில்!

65

அப்பா – மகன் சண்டை தீர வழிபட வேண்டிய கோயில்!

ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் உண்டு. வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்பட திப்புன்கூர் நந்தனாருக்கு நந்தி விலகிய இடம். கோபம் தீர திருத்தணிகை. உடல் நலம் சீராக வைத்தீஸ்வரன் கோயில் வழிபாடு. திருமண வரன் அமைய திருமணஞ்சேரி, ஞானம் கிடைக்க வேல் வழிபாடு என்று ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொரு வகையிலான சிறப்புகள் உண்டு.

நமது வேண்டுதல்கள் நிறைவேற அந்தந்த கோயில்களுக்கு சென்று வழிபடுவது என்பது சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் குடும்பத்தில் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையிலான பிரச்ச்னை தீர சுவாமிலை சென்று வழிபட வேண்டும். அப்படி சென்று வழிபட்டு வர அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றிப்புள்ளி வைக்கப்படும்.

இதே போன்று பதவி உயர்வு கிடைக்க, வருமானம் அதிகரிக்க, சம்பள உயர்வு கிடைக்க, பதவிகள் தேடி வர, எதிரிகளின் தொல்லை நீங்க, தோஷங்கள் நீங்க, கடன் பிரச்சனை குறைய, பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர என்று தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வகையில் நன்மையளிக்கும் கோயில்களும், பரிகார தலங்களும் அமைந்துள்ளன. அந்தந்த கோயில்களுக்கு சென்று பரிகாரங்கள் செய்து வர வாழ்க்கையில் நன்மை உண்டாகும்.