அமாவாசையில் என்னென்ன தானம் செய்யலாம்?

184

அமாவாசையில் என்னென்ன தானம் செய்யலாம்?

தை அமாவாசை நாளான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலமாக, தங்களால் முடிந்த அளவிற்கு ஏழை, எளியோருக்கு தானம் கொடுப்பதன் மூலமாக செய்த பாவங்கள், கர்ம வினைகள், தீவினைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். அதோடு, அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

காசி, ராமேஸ்வரம், கயா, ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, திரிவேணி சங்கமம் என்று இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. பித்ரு தோஷம் இருப்பவர்கள் ராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்‌ஷயவடம் ஆகிய இடங்களில் ஹோமம் செய்து தர்ப்பணம் செய்வதன் மூலமாக பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

நமது முன்னோர்களுக்கு ஆற்றங்கரை, குளக்கரை, நதிக்கரை, கடற்கரையில் தர்ப்பணம் செய்வார்கள். அப்படி தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்து வழிபட்டு தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த தை அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுப்பது மட்டுமல்லாமல் பிரச்சனைகள் தீர அன்னதானம், வஸ்திர தானம் என்று தானமும் கொடுக்கலாம். இதன் மூலம், சகல சௌபாக்கியங்களும் பெருகும். அன்னதானம் செய்வதன் மூலம் நமது கடன் பிரச்சனையும், வறுமையும் நீங்கும்.

ஏழை, எளியவர்களுக்கும், வயதான முதியவர்களுக்கும் ஆடையை தானமாக கொடுத்தால் நமது ஆரோக்கியம் அதிகரிக்கும். தீராத நோயும் தீரும். ஆயுள் விருத்தி கூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். அமாவாசை நாளன்று தேன் வாங்கி கொடுத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். காரிய வெற்றிக்கு தேங்காய் தானம் செய்யலாம். பசு தானம் கொடுக்க வெற்றி உண்டாகும். பசுவிற்கு அகத்திக்கீரை, அரிசி ஆகியவற்றையும் உணவாக கொடுக்கலாம்.

பழங்களை தானம் செய்வதன் மூலம் மனக் குழப்பங்கள் நீங்கும். தோங்கள் நீங்கும். வெள்ளி தானம் கொடுத்தால் துன்பங்கள், துயரங்கள் நீங்கும். தீராத நோய் தீர நெய் தானம் செய்யலாம். பால், தயிர் ஆகியவற்றை தானம் செய்வதன் மூலமாக கணவன் மனைவி பிரச்சனை தீரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கண் பிரச்சனை இருப்பவர்கள் தீபம், விளக்கு தானம் கொடுக்கலாம். இதன் மூலமாக பார்வை கோளாறுகள் நீங்கி, கண் பிரச்சனை தீரும்.