அம்மன் புடவையை பெண்கள் அணிந்து கொள்ளலாமா?

89

அம்மன் புடவையை பெண்கள் அணிந்து கொள்ளலாமா?

அம்மனுக்கு சாற்றிய புடவையை ஏலத்தில் எடுத்து அதனை பெண்கள் அணிந்து கொள்ளலாம். இதில் தவற்றில்லை. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் என அனைத்துமே இறைவனால், படைக்கப்பட்டவை. சிறிய பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து அவர்களை வழிபடுவதும் உண்டு, அம்மனுக்கு படைக்கப்படும் பிரசாதங்களை பக்தர்கள் வாங்கி சாப்பிடுவதும் உண்டு. அப்படியிருக்கும் போது அம்மனுக்கு சாற்றப்படும் புடவைகளை பெண்களும் கட்டிக் கொள்ளலாம்

ஆனால், அதில் சில வரைமுறைகள் இருக்கிறது. அதனை கண்டிப்பாக பெண்கள் கடைபிடிக்க வேண்டும். முதலில் ஏலத்தில் எடுக்கப்படும் அம்மன் புடவைகளை வீட்டு பூஜையறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகே பெண்கள் அணிந்து கொள்ளலாம். குறிப்பாக வீட்டில் பூஜை செய்யும் போதோ அல்லது கோயிலுக்கோ செல்லும் போது அம்மன் புடவையை கட்டிக் கொண்டு செல்லலாம்.

மாதவிலக்கு மற்றும் தீட்டு போன்ற நாட்களில் அம்மன் புடவையை அணிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் அம்மன் புடவையை அணிந்து கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.