ஆஞ்சநேயருக்கு இந்த பூவை சூட்டி வேண்டிக் கொண்டால், நீங்கள் நினைத்தது நடக்கும்!

42

ஆஞ்சநேயருக்கு இந்த பூவை சூட்டி வேண்டிக் கொண்டால், நீங்கள் நினைத்தது நடக்கும்!

நாம் எதிர்பார்க்கக் கூடிய, ஒரு நல்லது கூட நமக்கு நடக்கவே மாட்டேங்குது. எல்லா கஷ்டமும் துன்பமும் ஒரு சேர வந்து துன்புறுத்துகிறது. குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டத்திலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியவில்லை. பணக்கஷ்டத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. வீண் மருத்துவ செலவு, கடன் தொல்லை, குழந்தைகள் சொல் பேச்சு கேட்கவில்லை, மாமியார் மருமகள் பிரச்சனை, உறவுகளுக்குள் சண்டை, சொத்து பிரச்சனை, வீட்டில் சுபகாரியத்திற்கு தடை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டது. வாரம் தோறும் செவ்வாய் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் இந்த பரிகாரம் செய்யலாம். பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது  தாழம்பூ.

அந்த தாழம் பூவை வாங்கி ஆஞ்சநேயருக்கு சாத்த வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் சன்னதி கோயிலுக்கு சென்று இந்த தாழம்பூவை ஆஞ்சநேயருக்கு சாத்திவிட்டு, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். அந்த சன்னிதானத்திற்கு முன்பாகவே அமர்ந்து இரண்டு நிமிடம் கண்களை மூடி உங்களுடைய பிரச்சனையை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். எல்லா பிரச்சினையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். முதலில் ஒரு பிரச்சனை சரியாக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை 11 வாருங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள்.

ஆஞ்சநேயர் சன்னிதானத்திற்கு முன்பு சம்மணம் போட்டு அமர்ந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள் அதன் பின்பு ஆஞ்சநேயரை வலம் வந்துவிட்டு, நீங்கள் வீடு திரும்பி விடலாம். இதே போல 11 வாரம் தாழம் பூவை ஆஞ்சநேயருக்கு சூட்டி உங்கள் கோரிக்கையை வைத்து வேண்டுதல் வைத்தால் நீங்கள் நினைத்தது நிச்சயம் 11 வாரங்களில் நடந்து விடும்.

ஒருவேளை உங்களுக்கு தாழம்பூ கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் என்ன செய்வது. தாழம்பூ எசென்ஸ் கடைகளில் விற்கின்றது. அதை வாங்கிக் கொள்ளுங்கள். வேறு எந்த பூ கிடைத்தாலும் அதை வாங்கி அந்த பூவில், இந்த தாழம்பூ எசென்ஸ் தெளித்து ஆஞ்சநேயருக்கு சூட்டி விட வேண்டும். அவ்வளவு தான். ஆஞ்சநேயருக்கு இந்த தாழம்பு வாசம் மிக மிகப் பிடிக்கும். இந்த வாசம் வீசிக் கொண்டிருக்கும்போது மன மகிழ்ச்சியில் இருக்கும் ஆஞ்சநேயரிடம் நீங்கள் எந்த வரத்தை கேட்டாலும் அவர் உடனே வரங்களை வாரி தந்து விடுவார்.

அதிலும் ஆஞ்சநேயருக்கு பிடித்த ராம மந்திரத்தை உங்கள் வாயால் உச்சரித்து விட்டு வரங்களை கேட்கும் போது வேண்டியவரும் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.