ஆடிப்பெருக்கு: 16 செல்வங்களும் கிடைக்க மகாலட்சுமி வழிபாடு!

91

ஆடிப்பெருக்கு: 16 செல்வங்களும் கிடைக்க மகாலட்சுமி வழிபாடு!

ஆடி மாதம் காவிரி ஆற்றில் ஏற்படக்க் ஊடிய வெள்ளப்பெருக்கை குறிப்பது ஆடிப்பெருக்கு. பழங்காலத்தில் ஆடி மாதம் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாயம் செழித்து வளர்ந்தது. ஆடி பட்டம் தேடி விதை என்று கூறுவார்கள். ஆகையால், இந்த மாதம் ஏற்படக் கூடிய வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி விதை விதைத்து விவசாயம் செய்வார்கள்.

ஆடிப்பெருக்கு விவசாயிகளுக்கு மட்டுமின்றி விவசாயத்தின் மூலம் உயிர் வாழக்கூடிய ஒவ்வொரு உயிருக்கும் முக்கியமான ஒன்று. குடும்பத்துடன் நதிக்கரைக்கு சென்று மங்களப் பொருட்களை காவிரியில் விட்டு சர்க்கரை பொங்கல் செய்து காவிரி தாயை வழிபட்டு குடும்பத்துடன் அமர்ந்து உணவு உண்டு மகிழ்வார்கள்.

இதனால், எப்போதும் ஊரிலும், குடும்பத்திலும் செல்வ செழிப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கு நாள் அன்று ஊரில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும், அந்த குடும்பத்திற்கு தேவையான செல்வங்களை சேர்க்கத் துவங்குவார்கள். நகைகள், சொத்துக்கள் போன்றவற்றை இந்நாளில் வாங்கினால் அது பன்மடங்காக பெருகி நம்மிடம் சேரும் என்பது நம்பிக்கை. எனவே ஆடிப்பெருக்கில் எதை வாங்கினாலும் அது பெருகும் என்பதில் மாற்றமில்லை.

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாதவர்கள் கவலைப்பட தேவையில்லை. மகாலட்சுமிக்கு உகந்ததாக சாதாரண பொருட்களும் நிறையவே உண்டு. மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதில் முக்கியமான இந்த ஒரு பொருளை ஆடிப்பெருக்கென்று நீங்கள் வாங்கி வைத்தால் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி செல்வ செழிப்பானது அதிகரிக்கும்.

ஆடிப்பெருக்கு அன்று அம்மனை வழிபட வீட்டில் உள்ள கஷ்டங்கள், பிரச்சனைகள் எல்லாம் நீங்கி குடும்பம் செல்வ செழிப்போடு வாழும். மேலும் இந்நாளில் சுமங்கலி பெண்கள் தாலியையும் மாற்றிக் கொள்வார்கள். சர்க்கரை பொங்கல் நெய்வேதியமாக படைத்து அம்மனுக்கு வேப்பிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.

உங்களால் முடிந்த பொருட்களை இந்த நாளில் வாங்கி வைத்தால் அது மென்மேலும் பெருகும். கல் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால், விலையுயர்ந்த பொருட்களை வாங்க முடியாதவர்கள் இந்த ஆடிப்பெருக்கு நாளில் கல் உப்பு வாங்கி வந்து மகாலட்சுமியை வழிபாடு செய்யலாம். இது தவிர மகாலட்சுமி வாசம் செய்யக் கூடிய குண்டு மஞ்சள் கூட வாங்கி வந்து மகாலட்சுமி வழிபாடு செய்யலாம்.

குண்டு மஞ்சள் மகாலட்சுமியின் பூரண அம்சமாக விளங்குகிறது. வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு ஒவ்வொரு மஞ்சள் கிழங்கை கொடுத்து வழி அனுப்பினால் உங்களுடைய வறுமை நீங்கி தனதானியம் பெருகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. எனவே வீட்டிற்கு வரும் பெண்களை வெறுங்கையோடு அனுப்பாமல் குடிக்க மோர் அல்லது தண்ணீர் கொடுத்து குண்டு மஞ்சள் ஒன்றை கொடுத்து அனுப்புங்கள்.

அது போல ஆடிப்பெருக்கு நாளில் குண்டு மஞ்சளை புதிதாக வாங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் முழுவதுமாக நிரம்பும் படி வைக்க வேண்டும். எப்பொழுதும் பெண்கள் குண்டு மஞ்சளை சிறிதளவு தேய்த்து முகத்தில் பூசி தலைக்கு குளித்து வந்தால் பலவிதமான நோய்கள் நீங்குவதாக ஆன்மீகம் கூறுகிறது.