ஆடி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு!

87

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு!

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பு விசேஷங்கள் நடக்கும். அதிலேயும், ஆடி வெள்ளி இன்னும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். இந்த மாதங்களில் அம்மனின் சக்தி இருமடங்கு ஆகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் அம்மனை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வந்தால், அவர்கள் நினைத்த காரியம் நடக்கும்.

ஆடி மாதம் கடைசி வெள்ளிகிழமையான இன்று அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் வழிபாடு செய்யப்படும்.

ஆடி வெள்ளிக்கிழமை:

சுக்கிரவார் என்றால் வெள்ளிக்கிழமை. இந்த கிழமையில் அம்பிகையை வழிபட்டால் நல்ல காரியங்கள் நடைபெறும்.

இந்த நாளில் மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்தால், செல்வ வளம் பெருகும்.

ஆடி வெள்ளியன்று அம்மனை நினைத்து வழிபாடு செய்து வர திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும், பெண்களுக்குரிய அனைத்து வரங்களையும் அள்ளிக் கொடுப்பாள் என்பது ஐதீகம்.

பொதுவாக ஆடி மாதங்களில் 4 வெள்ளி வரும். முதல் வாரத்தில் சொர்ணாம்பிகை அம்மனையும், 2ஆவது வாரத்தில் காளி தேவியையும், 3 ஆவது வாரத்தில் காளிகாம்பாளையும், 4ஆவது வாரத்தில் காமாட்சி அம்மனையும் வழிபடுதல் சிறப்பு. ஒரு சில வருடங்கள் 5ஆவது வெள்ளியும் வரும். அந்த கிழமையில் வரலட்சுமி தேவி வழிபாடு செய்யப்படும். அதோடு, இந்த கிழமையில், வேண்டுவோருக்கு வேண்டிய வரம் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.

கடைசி வெள்ளி என்பதால், அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பெண்கள் சர்க்கரைப் பொங்கல், புத்தாடை அணிந்து கொண்டு, விரதமிருந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். அப்படி செய்யும் பெண்களுக்கு நீண்ட நாள், தீர்க்க சுமங்கலி, குழந்தை பாக்கியம் கொடுத்து அருள்வதோடு, அனைத்து வரங்களையும் கொடுப்பாள் என்பது நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.