ஆண்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

35

ஆண்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

சிலருக்கு சருமத்தில் அதிகமாக மச்சம் இருக்கும். இந்த மச்சத்தை பார்க்கும் முதியோர்கள் யோகக்காரன் என்றெல்லாம் சொல்ல கேட்டிருப்போம். இந்த மச்சம் உடலில் பிறக்கும் போதே இருக்கும்.

இது உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த மச்சத்தை வைத்தே ஜோதிடத்தில் ஒருவரின் வாழ்க்கையை பற்றி விளக்கி கூறுவர். இந்த பதிவில் ஆண்களின் உடலின் எந்த பகுதில் மச்சம் இருந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதைக்குறித்து பார்ப்போம்.

புருவம்

வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிஷ்டகரமான மனைவி கிடைக்கும். இரு புருவங்களுக்கு நடுவில் மச்சம் இருந்தால் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள்.

இடது புருவத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வரும். அதிகம் செலவு செய்யக்கூடிய ஆளாக இருப்பீர்கள்.

உள்ளங்கை

ஆண்களின் வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

நெற்றி

நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத நண்மை கிடைக்கும்.

மூக்கு

மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு இவர்களுக்கு இருக்கும்.

மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா வசதியும் பெற்றிடுவார்கள்.

மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பர்.

கண்

வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அதிக ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று இருப்பர்.

இரு கண்களில், ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள்பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.

இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும். இருப்பினும், அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

காது

இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

உதடு

மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருந்தால் காதல் மற்றும் அலட்சியமான செயல்களில் ஈடுபடுவீர்கள்.

உதட்டுக்கு மேல் இருந்தால் நல்ல வசதியாக இருப்பீர்கள் மற்றும் இசை, கலைத்துறையில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பீர்கள்.

கன்னம்

ஆண்களுக்கு இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

கழுத்து

கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நண்பர்களின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அதிக வசதியும், அதிக வறுமையும் இல்லாமல் நடுத்தரமான வாழ்வு வாழ்வார்.

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

மார்பு

இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பிறக்கும்.

உள்ளங்கால்

உள்ளங்காலில் மச்சம் இருப்பவர்கள் மிகுந்த புகழ் உடையவர்களாக இருப்பார்கள். கவிதை எழுதும் திறமை உடையவர்களாக இருப்பார்கள்.

சங்கீத்தில் ஈடுபாடு உடையவராக இருப்பார்கள். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருப்பார்கள். அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருப்பார்கள்.

வயிறு

வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள். மேலும் தன்னுடைய தகுதியை மீறிய ஆசை இருக்கும்.

வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பர்.

தொப்புள்

தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.

தோள்

ஆண்களுக்கு வலது தோளில் மச்சம் இருந்தால் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

முதுகு

முதுகுப் பகுதியில் ஆண்களுக்கு மச்சம் இருந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும். மன நிறைவுடனும் பக்தியுடனும் வாழ்க்கையை வாழ்பவர்கள்.

இவர்கள் அனைவரிடமும் அன்போடு பழகுவர். பணச்சேர்க்கையில் தட்டுப்பாடே இருக்காது. உயர்வான வாழ்க்கையும் செல்வச் செழிப்பும் அதிகம் இருக்கும்.