ஆமை பொம்மையை வீட்டில் வைக்கலாமா?

64

ஆமை பொம்மையை வீட்டில் வைக்கலாமா?

ஆமை புகுந்த வீடும், அமினா நுழைந்த வீடும் உருப்படவே உருப்படாது, என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்துவிட்டால் அந்த வீடு அழிவை நோக்கி செல்லும். அமீனா என்பவர் நீதிமன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி (டவாலி என்று கூட சொல்வார்கள்). நீதிமன்ற அறிக்கையை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பவர். அதோடு, வீடு, நகை, சொத்து என்று ஏதேனும் வில்லங்க விவரங்களை அதிகாரிகளுடன் வந்து அறிவிப்பவர். எனவே அவர் வீட்டுக்கு வந்தால் ஏதேனும் கெட்ட செய்தி தான் கொண்டு வருவார் என்பது தான் அர்த்தம்.

ஆதலால், தான் ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படவே உருப்படாது என்று சொல்வார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பழமொழி கல்லாமை, இயலாமை மற்றும் முயலாமை ஆகிய 3 விதமான ஆமைகளை உணர்த்துகிறது.

கல்வியற்ற, சோம்பேறித்தனம் கொண்ட, முயற்சியற்ற தன்மைகள் கொண்ட ஒரு வீடு முன்னேறவே முன்னேறாது என்பதைத்தான் இந்த பழமொழி அறிவுறுத்துகிறது. அமீனா புகுந்த வீடு எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்டது. இதுவே ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாத என்று சொல்வதற்கு காரணம்.

இப்படி சொல்லீட்டீங்க…ஆனால், குழந்தைகள் விளையாட ஆமை பொம்மையை பயன்படுத்தலாமா? அந்த பொம்மையை வீட்டில் வைக்கலாமா?

சீன நாட்டில் ராசி பொம்மைகளில் ஆமை பொம்மையும் ஒன்று. தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் ஆமை ராசி பொம்மையாக கருதப்படுகிறது. இந்த நாடுகளில் ஆமை பொம்மையை பணப்பெட்டி அருகில் வைத்தால், அதனால், வருவாய் அதிகரித்து செல்வம் சேர்வதாக நம்புகின்றனர்.

ஆமையை பொம்மை வடிவில் வீட்டில் வைக்கலாமா?

ஆமையை பொம்மை வடிவில் வைக்கலாம் என்று கூறுகிறது சீன ஃபெங் சூயி முறை (சீன நாட்டு வாஸ்து முறை). ஆமை எப்படி தனது 5 உறுப்புகளையும் உள்ளடக்கிக் கொண்டு எதிரிகளிடமிருந்து தன்னைத் தானே தற்காத்துக் கொள்கிறதோ, அதே போன்று பிறர் கண் பட்டாலும், நம்மை அவர்களின் தீய கண்களிலிருந்து அதாவது கண் திருஷ்டியிலிருந்து காப்பதற்கு ஆமை பொம்மை வடிவம் உதவுகிறது.

ஆமை சிலையை எங்கு வைக்க வேண்டும்?

உலோகத்தால் செய்யப்பட்ட ஆமை சிலையை நீர் நிறைந்த ஒரு குவளையில் வைத்து, வீட்டிற்குள் வடக்கு திசையில் வைக்க வேண்டும். ஒருவேளை வடக்குப் பக்கம் படுக்கையறை இருந்தால், வெறும் உலோக ஆமையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலமாக பண வசதி அதிகரிக்கும். எதிரிகளை வெல்லும் பலம் அதிகரிக்கும், மேலும் நீண்ட ஆயுள், பொறுமை குணம் உண்டாகும்.

ஆமை கோயில்:

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் ஆமைக்கென்றே ஒரு கோயில் உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோயில் சென்னையிலிருந்து வெறும் 12 கிமீ தொலைவில் உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் ஸ்ரீ காகுளத்தைத் தவிர வேறெங்கும் ஆமைக்கு என்று கோயில் கிடையாது. இந்த கோயிலில் வழிபட்டால் பகைவர்கள் எத்தனை வலிமையுள்ளவராக இருந்தாலும் அவர்களை நம்மால் தீண்ட முடியாது.