ஆயுள் பலம் கூட கணவன் – மனைவி செய்ய வேண்டிய வழிபாடு!

22

ஆயுள் பலம் கூட கணவன் – மனைவி செய்ய வேண்டிய வழிபாடு!

பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் நீண்ட நாள் வாழ் வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். இதுவே மனைவியாக இருந்தால், தனது கணவருக்கு எந்த நோயும் வரக்கூடாது. அவர் நீண்ட ஆயுளுடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவாள். இதே போன்று தான் கணவனும் ஆசைப்படுவான்.

நம் நாட்டு கலாச்சாரத்தின் படி கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜை புனஷ்காரங்கள் செய்தும் விரதமிருந்தும் வேண்டிக் கொள்வார்கள். இதே போன்று மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம்.

அதில் ஒன்று குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்… தனது அங்கத்தின் சரிபாதியை பார்வதி தேவிக்கு கொடுத்து அர்த்தநாரியக இருப்பவர் சிவபெருமான். அப்பேற்பட்ட சிவபெருமானை சிவனுக்கே உரிய நாளான திங்கள் கிழமையில் கணவன்மார்கள், சிவபெருமானை நினைத்து தனது மனைவிக்காக விரதமிருந்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலமாக, மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்கும். இதே போன்று மனைவியும் சிவனை நினைத்து விரதமிருந்து சிவபெருமானை வழிபட கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

திருமணமான பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் நிலைக்க வரலட்சுமி விரதமிருந்து வழிபாடு செய்வார்கள். திருமணம் நடக்கும் போது அக்னி ஹோமம் வளர்ப்பது வழக்கம். அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சிவபெருமான் விரத வழிபாடு விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.