ஆவணி கிருத்திகை: எல்லா யோகமும் பெற கிருத்திகை வழிபாடு!

168

ஆவணி கிருத்திகை: எல்லா யோகமும் பெற கிருத்திகை வழிபாடு!

சூரிய பகவானுக்குரிய நட்சத்திரம் கிருத்திகை. சூரிய பகவான் இந்த மாதம் சொந்த வீடான சிம்ம ராசியில் பிரவேசிப்பார். அதனால், இந்த மாதம் விரதமிருந்தால் சூரிய கிரகத்தால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். முருகன் பிறந்தது விஷாக நட்சத்திரமாக இருந்தாலும், முருகனைப் பாலூட்டி சீராட்டி வளர்த்தது 6 கார்த்திகைப் பெண்கள். இவர்கள் கார்த்திகை நட்சத்திரமாக மாறிய அன்றைய நாளைத் தான் கிருத்திகையாக வழிபடுகிறார்கள்.

ஆவணி மாத த்தை மாதங்களின் அரசன் என்று கூறுகிறார்கள். எந்தவொரு நல்ல காரியத்தையும் ஆவணி மாத த்தில் தான் தொடங்குகிறர்கள். தெய்வ காரியமாக இருந்தாலும் சரி, சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அதனை ஆவணி மாதத்தில் தொடங்குகிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆவணி மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால், வாழ்வில் அனைத்து நன்மைகளும் பெறலாம்.

கிருத்திகை மந்திரம்:

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி

தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை கிருத்திகை நட்சத்திர நாளன்று காலை அல்லது மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடும் போது 9 அல்லது 27 முறை சொல்லி வழிபட வேண்டும். மேலும், அந்த கோயிலில் 9 முற பிரதிட்சணம் வர வேண்டும். இப்படி மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று செய்து வந்தால் முருகப் பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். மேலும், நம் கர்ம வினைகள் நீங்கி, அனைத்து யோகங்களையும் பெற்று வளமோடு வாழலாம்.