இடையூறுகள் விலகி வெற்றி கிடைக்க தூர்வா கணபதி விரதம்!

34

இடையூறுகள் விலகி வெற்றி கிடைக்க தூர்வா கணபதி விரதம்!

தூ + அவம் என்பதே தூர்வா என்றானது. தூ என்றால் தூரத்தில் இருப்பது என்று பொருள். அதே போன்று அவம் என்றால் அருகில் வரவழைப்பது என்பதாகும். ஆகையால், தொலைவிலுள்ள கணபதியின் பவித்ர துகள்களை அருகில் வரவழைப்பதற்கு தூர்வா என்று பொருள். சிராவண மாதம் அதாவது ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று தூர்வா கணபதி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று காலை எழுந்து முடிந்து குளித்துவிட்டு தரை முழுவதும் தூர்வை என்ற அருகம்புல் நிறைய பரப்பி வைத்துக் கொண்டு அருகம்புல் மீது கணபதி விக்ரகம் அல்லது படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

பூஜையில் செய்யப்படும் ஒவ்வொன்றையும் அருகம்புல் கொண்டு செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய், அவல நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி கணபதியை வழிபட வேண்டும். பூஜையின் முடிவின் போது,

கணபதயே நம

உமாபுத்ராய நம

அகநாசநாய நம

ஏகதந்தாய நம

இபவக்த்ராய நம

மூஷிகவாஹனாய நம

வினாயகாய நம

ஈசபுத்ராய நம

ஸர்வஸித்திப்ரதாயகாய நம

குமாரகுரவே நம

இந்த 10 நாமங்களைச் சொல்லி அருகம்புல்லால் கணபதியை அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும், கணபதிக்குரிய மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

கணேஸ்வர கணாத்யக்ஷ கௌரீபுத்ர கஜானன

வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாதுத்வத் ப்ரஸாதாத் இபாநந

இப்படி அருகம்புல்லால், கணபதியை பூஜித்து வந்தால், அனைத்து விதமான இடையூறுகளும் விலகி அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.