இந்த திசையில் பல் துலக்கினால் என்ன நடக்கும்?

170

இந்த திசையில் பல் துலக்கினால் என்ன நடக்கும்?

திசைகள் நான்கு வகைப்படும். இது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதில் கிழக்கு திசை என்பது சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கும். எல்லா திசைகளுக்கும் ஆரம்பமாக இருப்பது கிழக்கு திசை. இந்த தொகுப்பில் கிழக்கு திசை நோக்கி சில விஷயங்களை செய்வதால் ஏற்படும் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காலை தூக்கம் எழுந்தவுடன் இந்த நவீன காலத்தில் நாம் அனைவரும் செய்வது மொபைல் போனை பார்ப்பது தான். ஆனால் காலை தூக்கம் எழுந்ததும் கிழக்கு திசையை நோக்கி தேவதைகளை வணங்கினால் நல்லது நடக்குமாம். காலையில் எழுந்தவுடன் முதலில் நமக்கு இஷ்டப்பட்ட இடங்களுக்கு செல்லும் முன் கிழக்கு நோக்கி சில அடிகள் எடுத்து வைத்தல் மிகவும் நல்லது.

காலையில் எழுந்து கதவு மற்றும் ஜன்னல்கள் இவற்றைத் திறக்கும்போது வலது பக்கம் உள்ள கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை திறப்பது நல்லது. பல் துலக்கும் போது நடுவிரல் கொண்டு கிழக்கு திசை நோக்கி பல் துலக்கினால் ஆயுள் பெருகும். வீண் சண்டைகள் மற்றும் தேவை இல்லாத வார்த்தைகளால் துன்பங்கள் பெருகாது. பல் துலக்கி விட்டு வாய் கழுவும் போது இடது கை பக்கம் துப்புங்கள். நாம் வலது பக்கமாக துப்பினால் செல்லும் காரியங்கள் நடைபெறாது .

கிழக்கு திசையில் செய்யும் வழிபாடுகள் மற்ற திசைகளில் செய்யும் செயல்களுக்கு பாதுகாப்பாக அமையும். குளிக்கும்போது கிழக்கு திசை பார்த்து குளித்தல் நல்லது. வெளி இடங்களுக்கு சென்று குளிப்பவர்கள் கிழக்கு திசையைப் பார்த்து குளிக்க முடியாவிட்டால் சிறிதளவு தண்ணீர் எடுத்து கிழக்கு திசை நோக்கி நின்று தலையில் தெளித்து விட்டு பின்னர் மற்ற திசையை பார்த்து குளிப்பது நல்லது.

மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு நோயாளியை மருத்துவரின் வலப்பக்கத்தில் வைத்துக் பரிசோதித்தால் எளிதில் நோயின் தன்மையை கண்டறிந்து பயனுள்ள மருந்துக்களை கொடுக்க முடியம். எல்லா திசைகளின் தொடக்கம் கிழக்கு திசை என்பதால் கிழக்கு நோக்கி எந்த காரியத்தை செய்தாலும் நன்மை பயக்கும். கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்வி திறமை வளரும். மேலும் ஆயுசு நாள்கள் பெருகும்.