இந்த வருடமே சொந்த வீடு வாங்க இதை மட்டுமே செய்தால் போதும்!

121

இந்த வருடமே சொந்த வீடு வாங்க இதை மட்டுமே செய்தால் போதும்!

உலகத்தில் இருப்பதற்கு வீடு கூட இல்லாமல் தவிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களது நோக்கமே எப்படியாவது கஷ்டப்பட்டு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான். இந்த புது வருடத்திலாவது சொந்த வீடு அமையாதா என்ற ஏக்கத்தோடு வாழும் ஒவ்வொருவரும் ஒரு செங்கலை வாங்கி இப்படி செய்து வந்தால் சொந்த வீடு அமையும் தெரியுமா?

சொந்த வீடு யோகம் பெறுவதற்கு ஜாதகத்தில் கிரக அமைப்புகள் அதற்கான அம்சத்தை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் சொந்த வீடு , நிலம் எதுவுமே இல்லாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் செவ்வாய் பகவான். ஜாதகத்தில் செவ்வாயின் ஆசி இருந்தால் தான் சொந்த வீட்டில் வாழ முடியும்.

இத்தனை வருடம் வாடகை கொடுத்து மன வேதனையுடன் இருக்கும் நீங்கள் செவ்வாய் பகவானை வணங்கி வந்தால் அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும். இதற்கு செவ்வாய்க்கிழமை தோறும், நவக்கிரக சந்நிதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வந்தால் சொந்த வீடு கனவு நிறைவேறும்.

அதுமட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஓரையில் கடைக்கு சென்று ஒரே ஒரு செங்கல்லை வாங்கி மூலவர் பாதத்தில் வைத்து பூஜை செய்து கொடுக்கும் கோயில்களுக்கு சென்று பூசாரியிடம் செங்கல்லை கொடுத்து பூஜை செய்து வாங்கி வரலாம் அல்லது உங்கள் வீட்டில் வடகிழக்கு மூலையில் அந்த செங்கலை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு விஷ்ணு கோத்திரம் உள்ளவர்கள் அவர் நாமத்தையும், சிவ கோத்திரம் உள்ளவர்கள் பட்டையையும் செங்கலுக்கு இட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு செவ்வாய் பகவானுக்கு ஏற்ற நிறமான சிவப்பு நிற ஆடையை புதிதாக வாங்கி அந்த செங்கலில் கட்டிக்கொள்ள வேண்டும். இதனைச் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் தான் செய்ய வேண்டும். மேலும் மல்லிகைப்பூ அல்லது செண்பகப்பூ செங்கலுக்கு வைக்க வேண்டும். பின்னர் தூப, தீப, ஆரத்தி காண்பித்து

‘ஓம் வீரத்வஜாய வித்மஹே

விக்ன ஹஸ்தாய தீமஹி

தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்’

என்ற செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதுபோல செவ்வாய் பகவானுக்கு உரிய தானியமாக இருப்பது துவரை. இது கொண்டு செய்யப்பட்ட ஏதாவது ஒரு நிவேதனத்தை பிரசாதமாக பூஜையில் வைக்க வேண்டும். பூஜை முடிந்ததும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இந்த பிரசாதத்தை படைத்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இப்படி செய்ய விரைவாகவே தோஷங்கள் நீங்கி சொந்த வீடு கனவு நனவாக நிறையவே வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.