இன்றைய வைகாசி மாத கிருத்திகை

7

|| முருகப்பெருமானின் கிருத்திகை விரதம் இருப்பது எப்படி ||

முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது.

மாதக் கிருத்திகை விசேஷம்.

அதிலும் ஆடிக் கிருத்திகை என்றால் மிகவும் விசேஷம்.

இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

விராலிமலை திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறும். அறுபடை வீடு ஸ்தலங்களிலும், சென்னையில் உள்ள முருகன் கோவில்களிலும், ஆடி கிருத்திகை விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயண துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள்.

ஆடிக் கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.

குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் ஸ்கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர்.

உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன.

தேவர்களின் மாலை நேரம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

தை மாதக் கிருத்திகையை விட ஆடிக் கிருத்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது.

ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை பெண்கள் ஸ்கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் ஸ்கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர்.

அப்போது சிவபெருமான் கிருத்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.

அவ்வாறே இன்றும் முருக பக்தர்கள் யாவரும் கிருத்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும்.

மறுநாள் கிருத்திகை அன்று அதிகாலையில் நதி நீராடிய திருநீறு இட்டு வீட்டில் குத்து விளக்கேற்றி தூபம் தீபம் காட்டி நிவேதனம் செய்து சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்து முருகனை வழிபாடு புரிய வேண்டும்.

அன்று நீர் மட்டும் அருந்தி முருகப் பெருமானின் காயத்ரி மந்திரங்கள், முருகன் ஷஷ்டி கவசத்தையும் பாராயணம் செய்து ஜெபம், தியானம், கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.

இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து ஸ்கந்தனின் மந்திரங்களை கூறி மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து ஸ்கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவு உண்ண வேண்டும்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம்.

மாதா மாதம் வரும் கார்த்திகை மாதக் கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

க்ருத்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். வேறு சிலரும் இவ்விரதம் மேற்கொண்டு நற்கதி அடைந்தார்கள்.

பலன்கள்:

பொதுவாக செவ்வாயின் அம்சமாக முருகப் பெருமான் பார்க்கப்படுகிறார். அதனால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடைகள், செவ்வாய் தோஷ தடை, புத்திர தோஷம், சகோதரர்களால் சங்கடங்கள், குருதிசை மண், மனை, சொத்து வழக்குகளில் பிரச்னைகள், செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை அல்லது ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்திலும் தினத்தில் முருகப்பெருமானை வணங்கி அனைத்து பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, சகல ஐஸ்வரியத்தைப் பெறலாம்.

முருகப் பெருமானின் காயத்ரி மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்.

|| 108 முறை ||

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.