இழந்த பொருட்கள் கிடைக்க சொர்ணாகர்ஷண கால பைரவர் வழிபாடு!

120

இழந்த பொருட்கள் கிடைக்க சொர்ணாகர்ஷண கால பைரவர் வழிபாடு!

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் என்ற ஊரில் உள்ள கோயில் கண்ணாயிரநாதர் கோயில். இந்தக் கோயிலில் கண்ணாயிரநாதர் மூலவராக காட்சி தருகிறார். தாயார், கைலாச நாயகி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இந்த ஊரின் புராண பெயர் திருக்காறாயில் மற்றும் திருக்காறைவாசல் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக நாளில் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலில் ராஜகோபுரம் என்று ஏதுமில்லை. சுந்தரர் சன்னதி, தியாகராஜசபை, விநாயகர், மகாவிஷ்ணு, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர், ஆறுமுகசாமி சன்னதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் உள்ள சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால், பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

கண் தொடர்பான நோய் உள்ளவர்கள், இந்தக் கோயிலில் கொடுக்கப்படும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து, சேஷ தீர்த்தத்தில் நீராடி, பிரசாதமாக கொடுக்கப்படும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பிரசாதமாக பெற்று சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும் என்பது ஐதீகம். இதே போன்று தோல் தொடர்பான நோய் உள்ளவர்கள் பௌர்ணமி நாளில் தரப்படும் சேஷ தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. பிரம்மன் தனக்கு ஏற்பட்ட சாபவிமோட்சனம் நீங்க இந்தக் கோயிலில் ஒரு குளம் ஒன்றை உண்டாக்கி, ஈசனை வழிபட்டு சாபவிமோட்சனம் பெற்றதால், பிரம்ம தீர்த்தம் என்று பெயர் பெற்றது. ஆதிசேஷன் இங்குள்ள கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் உண்டானது. இது இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சேஷ தீர்த்தம் என்னும் கிணற்று நீர், மருத்துவ குணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, வேண்டுவோர்க்கு அளிக்கப்படுகிறது.

கண் தொடர்பான நோய் உள்ளவர்கள், இந்தக் கோயிலில் கொடுக்கப்படும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து, சேஷ தீர்த்தத்தில் நீராடி, பிரசாதமாக கொடுக்கப்படும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பிரசாதமாக பெற்று சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும் என்பது ஐதீகம். இதே போன்று தோல் தொடர்பான நோய் உள்ளவர்கள் பௌர்ணமி நாளில் தரப்படும் சேஷ தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில் மேற்கு பிரகாரத்தில் அருள் பாலிக்கும் விநாயகரை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறி பெருமகிழ்ச்சி உண்டாகும் என்பதால், இந்த விநாயகருக்கு பிரமோத விநாயகர் என்று பெயர்.

பிரம்ம தீர்த்தத்தின் கரையில் அருல் பாலிக்கும் விநாயகர் கடுக்காய் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு நாள் இரவில் வணிகன் ஒருவன் வண்டி நிறைய ஜாதிக்காய்களை ஏற்றிக் கொண்டு வந்து இந்தக் கோயிலில் தங்கினான். அப்போது விநாயகப் பெருமான், சிறுவன் வடிவில் வந்து மூட்டைக்குள் இருப்பது என்னவென்று கேட்கவே, மூட்டைக்குள் இருப்பது ஜாதிக்காய் என்று சொன்னால், அதிக வரி கட்ட வேண்டி வரும் என்று பயந்து எல்லாமே கடுக்காய் என்று பொய் கூறினான்.

அவன் சொன்னபடியே ஜாதிக்காய் அனைத்தும் கடுக்காயாகவே மாறின. இதையடுத்து, சிறுவனாக வந்திருப்பது விநாயகப் பெருமான் என்பதை அறிந்து கொண்ட வணிகன், தான் பொய் சொன்னதற்கு மனம் திருந்தி மன்னிப்பு கேட்டான். இதன் காரணமாக, கடுக்காய் அனைத்தும் ஜாதிக்காயாக மாறின. அன்று முதல் விநாயகர் கடுக்காய் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

காரகில் மரக்காடு நிறைந்து இத்தலம் இருந்ததால் திருக்காரகில் என்று பெயர் பெற்றது. அதன் பிறகு திருக்காரவாசல் என்று அழைக்கப்பட்டது. பிரம்மாவிற்கு ஒருமுறை தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது.

அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட திருவுளம் கொண்டு அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார். பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காராயில் (திருக்காரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். எனவே கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார்.

டங்கம் என்றால் கல் சிற்பியின் சிற்றுளி என்பது பொருள். விடங்கம் என்றால், சிற்பியின் உளி இல்லாமல் என்பது பொருள். சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல் தானே உருவான இயற்கை வடிவங்களை சுயம்பு அல்லது விடங்கம் என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளியே இல்லாமல் உருவான 7 லிங்கங்கள் சப்தவிடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஒரு நாள், இந்திரன் அசுர்ர்களால் தனக்கு ஆபத்து ஏற்பட இருப்பதை அறிந்து கொண்டு முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியால், போர் செய்து அசுரர்களை வென்றார். வெற்றிக்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும் என்று இந்திரன் கேட்க, தாங்கள் பூஜை செய்து வரும் விடங்க லிங்கத்தை பரிசாக தாருங்கள் என்று முசுகுந்தன் கேட்டார்.

ஆனால், இந்திரனுக்கோ அதனை தருவதற்கு மனமில்லை. ஆகையால், தேவசிற்பியான மாயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப் போன்று 6 லிங்கங்களை செய்து அவதனை தர நினைக்கிறான். ஆனால், முசுகுந்தன் செங்கழுநீர் பூவின் வாசம் உடைய உண்மையான சிவலிங்கத்தை தனது ஆத்ம சக்தியால் கண்டுபிடிக்கிறார். இது முழுக்க முழுக்க சிவபெருமானின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன் தன்னிடமிருந்த உண்மையான சிவலிங்கத்தையும், மற்ற பிற லிங்கங்களையும் முசுகுந்தனுக்கு பரிசாக அளித்தார்.

இதையடுத்து, தான் பெற்ற 7 லிங்கங்களையும் 7 இடங்களில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இவை சப்தவிடத்தலங்கள் எனப்பட்டன. அவை திருவாரூரில் வீதி விடங்கர், திருவாய்மூரில் நீல விடங்கர், திருக்குவளையில் அவனி விடங்கர், நாகப்பட்டினத்தில் சுந்தர விடங்கர், திருநள்ளாறில் நகர விடங்கர், வேதாரண்யத்தில் புவனி விடங்கர், திருக்காரவாசலில் ஆதி விடங்கர் என்று அருள் பாலிக்கிறார்.

மகாலட்சுமி, இந்திரன், மகாவிஷ்ணு, கபால முனிவர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் தரிசனம் செய்துள்ளனர். இந்தக் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி ஞான தட்சிணாமூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் அருள் பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருட்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.