உங்கள் குழந்தை மருத்துவர் ஆகுமா ? மருத்துவர்களை உருவாக்கும் சுப ஒளி பொருந்திய செவ்வாய்

50

இந்த கொரோனா காலத்தில் நம்மை உயிர் காக்கும் தெய்வங்களாக விளங்குபவர்கள் மருத்துவர்களே , நடுத்தர குடும்பத்தில் பிறந்த அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தனது மகன் அல்லது மகளை மருத்துவராகி பார்க்க வேண்டும் என்பதே . நமது நாட்டின் புள்ளி விபரத்தின் படி 1500 பேருக்கு ஒரு டாக்டர் இருப்பதாக நமது அரசாங்கம் சொல்கிறது . இதில் விதியின் சில நேர வித்தியாசமான விளையாட்டுகளை பார்க்க இயலும் , ஒரு குடும்பத்தில் அம்மா , அப்பா இருவரும் மருத்துவராக இருந்து அவர்களின் பையன் துளியும் மருத்துவத்தின் மேல் ஆர்வம் இல்லாமல் இருப்பதும் . துளியும் படிப்பு அறிவு இல்லாத குடும்பத்தில் ஒரு குழந்தை வைராக்கியத்துடன் படித்து மருத்துவர் ஆகி இருப்பதையும் காண முடியும் . தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் நீட் போன்ற பொது தேர்வுகளுக்கு கோச்சிங் தரும் சென்டர்களுக்கு சென்று பணத்தை இரைப்பதையும் , ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி லட்சங்களை கொட்டி படிக்க வைப்பதையும் கண்ணார கண்டு உள்ளோம் .

ஜாதக படி ஒருவர் மருத்துவராக வேண்டும் என்றால் என்ன அமைப்பு வேண்டும் ? என்ன கிரக நிலைகள் வேண்டும் என்பதை இந்த பதிவில் ஜோதிட விளக்கமாக காண்போம் . உங்கள் மகன் / சகோதரர் / உறவினர் மருத்துவர் ஆவார் என்று அறிந்து கொள்ள விரும்பினால் +91 9677824799 என்ற எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தின் பிறந்த நேரம் , தேதி மற்றும் இடத்தின் தகவல்களை அனுப்பி நமது வாட்சப் ஜோதிடர் கிரியை தொடர்ப்பு கொள்ளுங்கள் . குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும் .

1. எந்த லக்கினம் மற்றும் ராசியாக இருந்தாலும் , செவ்வாய் சுப ஒளி தொடர்பு ஏற்பட்டும் சுபமாகி ராசி மற்றும் லக்கினத்தின் 10 ஆம் வீட்டுடன் தொடர்ப்பு கொண்டால் ஒருவன் மருத்துவர் ஆகும் அடிப்படை அமைப்பு ஏற்படும் . இதில் லக்கினத்துக்கு 10 ஆம் வீட்டில் திக் பலம் மற்றும் சுப தொடர்ப்புடன் இருப்பது மிக சிறப்பு .

2. ஒருவர் MS எனப்படும் அறுவை சிகிச்சையில் நிபுணர் ஆக , செவ்வாய் முதல் நிலை சுப தொடர்பிலும் , சூரியன் இரண்டாம் நிலை சுப தொடர்பிலும் இருக்க வேண்டும் , கூடுதலாக செவ்வாயின் வீடுகள் சுப தொடர்ப்பில் இருக்கும் நிலையை பொறுத்து அந்த மருத்துவரின் தர மதிப்பீடை நிர்ணயம் செய்யலாம் .

3. ஒருவர் MD எனப்படும் ஜெனரல் மெடிசின் துறையில் நிபுணத்துவம் ஆக , செவ்வாயுடன் கேது இரண்டாம் நிலை சுப தொடர்ப்பு ஏற்பட வேண்டும் . இதில் புதனும் சுப தொடர்ப்பு ஏற்பட்டால் அவர் புதிய மருந்துகளை கண்டுபுடிக்கும் நுண்ணறிவை பெற்று இருப்பார் .

4. ஒருவர் கால்நடை மருத்துவராக இருக்க – செவ்வாயுடன் சனி இரண்டாம் நிலை சுப தொடர்புகளும் , பல் மருத்துவராக செவ்வாயுடன் சுக்கிரன் இரண்டாம் நிலை சுப தொடர்ப்புடனும் இருக்க வேண்டும் .

5. ஒருவருக்கு செவ்வாய் பகுதி அளவு சுப தொடர்ப்புடன் இருக்கும் பொழுது psychotherapist எனப்படும் துறையில் இருக்க வைப்பார் .

அனைவரும் பரம் பொருள் துணையுடன் நோய் நொடி இல்லாமல் நீடுழி வாழ்க .