உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்!

92

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்!

புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் என்ற ஊரில் உள்ளது சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி சகஸ்ரலட்சுமீஸ்வரர் காட்சி தருகிறார். மேலும், தாயார் பிரகன்நாயகி, பெரியநாயகி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும். முன் கோபம் என்பது இவர்களின் இயல்பான குணம். தெய்வீக விஷயங்கள் மீது அதிக நாட்டம் இருக்கும். கடமைகளை திறமையோடு செய்து முடிப்பீர்கள். பார்ப்பதற்கு அழகாகவும், லட்சணமாகவும் இருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க சகஸ்ரலட்சுமீஸ்வரரை வழிபாடு செய்கின்றனர். கடன் பிரச்சனைகள் தீர, செல்வம் செழிக்க, புத்திர பாக்கியம் உண்டாக சகஸ்ரலட்சுமீஸ்வரரை வழிபாடு செய்கின்றனர்.

உத்திரட்டாதி நட்சத்திர தலம்:

அகிர்புதன் மகிரிஷி, அக்னி புராந்தக மகிரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகிரிஷி ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்பதால், மாதந்தோறும் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதாக ஐதீகம். அதுவும், உத்திரட்டாதி நட்சத்திர நாளில்அரூப வடிவில் இந்தக் கோயிலுக்கு வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திர நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சகஸ்ரலட்சுமீஸ்வரரை வழிபட்டால் கூடுதல் சிறப்பு தரும்.

மேலும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இந்தக் கோயிலில் ரிஷிகள் போன்று ஹோமங்கள் செய்து சர்க்கரைப் பொங்கள் நைவேத்தியம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்தால் சிறப்பு. இதன் மூலமாக பணக்கஷ்டம் நீங்கும். தடைபட்ட அனைத்து காரியங்களும் சிறப்பாக நடந்து முடியும்.

சிறப்பம்சம்:

பெயர்க் காரணம்:

தீ எனப்படும் அக்னி பகவானும், அயன் எனப்படும் சூரிய பகவானும் இந்தக் கோயிலுக்கு வந்து ஹோமம் செய்து சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதலால், இந்த ஊரானது தீயத்தூர் என்றழைக்கப்பட்டது.

அக்னிக்கு பெயர் போன கோயில் என்பதால் உடல் சூடு (உஷ்ணம்) தொடர்பான நோய்கள் தீர இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. கடன் பிரச்சனை தீரவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், செல்வ வளம் அதிகரிக்கவும் இந்தக் கோயிலில் உள்ள பிரகன் நாயகி அம்பாளை வழிபடுகின்றனர். இந்தக் கோயிலில் சிவபெருமானுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யப்படுகிறது.

தல வரலாறு:

ஒவ்வொரு நாளும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு திருமால், லிங்க பூஜை செய்து வந்தார். அப்படி ஒரு நாள், ஆயிரம் தாமரை மலரில் ஒரு பூ மட்டும் குறைந்துள்ளது. இதனால், தனது கண்ணையே ஒரு மலராக நினைத்து அதை எடுக்க முயன்றார். அப்போது, அவரது முன் சிவபெருமான் தோன்றி, அதனை தடுத்தார். இதையறிந்த லட்சுமிக்கும், சிவனின் தரிசனம் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

இதன் காரணமாக அகத்திய முனிவரின் ஆலோசனையின்படி பூலோகம் வந்த லட்சுமி, திருமால் போன்று ஆயிரம் மலர்களைக் கொண்டு சிவனை பூஜித்து வந்தாள். லட்சுமியின் பூஜையால் மகிழ்ந்த சிவபெருமான், மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதன் காரணமாக தீயத்தூர் இறைவன் சகஸ்ரலட்சுமீஸ்வரர் என்று பெயர் பெற்றார். மேலும், சகஸ்ரம் என்றால் ஆயிரம். ஒவ்வொரு நாளும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு பூஜிக்கப்பட்டதால், சகஸ்ரலட்சுமீஸ்வர்ர் என்று பெயர் பெற்றார்.