எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி!

128

எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி!

எப்பேற்பட்ட கஷ்டங்களிலிருந்து விடுபடவும் எண்ணியது எண்ணியபடி நடக்கவும் கண்கண்ட தெய்வமாய் விளங்குவது துர்க்கை. அவளை செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடுவது மிகுந்த பலனை தருகிறது. செவ்வாய், வெள்ளிகளில் எலுமிச்சைப் பழத்தில் தீபமேற்றி துர்க்கை சந்நிதியில் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்வது நலம் தரும். மேற்கண்டவாறு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமையில் ஒன்பது வாரமும் தொடர்ந்து செய்வதால் ஒன்பதாவது கிழமைக்குள்ளேயே நாம் விரும்பியது ஈடேறும். கைக்கூடாய் பலனை தரும் துர்கா தேவி ஸ்லோகம் இதோ…

எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி…

பூஜைக்குரிய நேரம்

ஞாயிற்றுக்கிழமை : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

செவ்வாய்க்கிழமை : மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

வெள்ளிக்கிழமை : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

ராகு கால துர்க்கா அஷ்டகம்…

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்

தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்

தாபம் நீக்கியே என்னைத்தாங்கும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள்

உண்மையானவள் எந்தன் உயிரைக்காப்பவள்

நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மானவள்

நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள்

ஆம்மையானவள் அன்புத் தந்தை யானவள்

இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்

மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே

உயிருமானவள் துர்க்கா உடலுமானவள்

உலகமானவள் எந்தன் உடமை யானவள்

பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்

பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்

துறையு மானவள் இன்பத் தோனி யானவள்

அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்

நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்

குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே

திருவு மானவள் துர்க்கா திரிசூலி யானவள்

திலகமாய் என்றும் திகழும் துர்க்கையே!

தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே

அன்னை துர்க்கையே! என்றும் அருளும் துர்க்கையே!

அன்பு துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

கன்னி துர்க்கையே! இதயக் கமல துர்க்கையே!

கருணை துர்க்கையே! இதயக் கமல துர்க்கையே!

கருணை துர்க்கையே! வீர சுகுண துர்க்கையே!

தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

தேவி துர்க்கையே ஜெய தே

ஜெய தேவி துர்க்கையே

எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி..

மந்திரம் உச்சரிக்கும் முறை…

துர்க்கை அம்மன் துதி பாடும்முன் அகல் விளக்கேற்றி, புஷ்பம் வைத்து துதி பாடல் தொடங்க வேண்டும். எலுமிச்சை அகல் விளக்கேற்றல் மிக சிறப்பு. தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே! என்ற நாமம் பாடும் ஒவ்வொரு தடவையும் கையெடுத்துத் வணங்க வேண்டும். இப்பாடலை பாடிக்கொண்டே அடிமேல் அடி வைத்து 7 முறை துர்க்கை அம்மனை வலம் வந்து முடித்தல் வேண்டும். இப்படி ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்து வர நினைத்தது நிறைவேறும்…

ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி!! போற்றி!!