எதிரிகளின் தொல்லை நீங்க வராஹி அம்மன் வழிபாடு!

51

எதிரிகளின் தொல்லை நீங்க வராஹி அம்மன் வழிபாடு!

பொதுவாக கஷ்டங்கள் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவரது வீடுகளிலும் ஏதாவது ஒரு வழியில் துன்பங்கள், கஷ்டங்கள், வறுமை என்று இருந்து கொண்டே இருக்கும். இதில், எதிரிகளின் தொல்லை கூட அவ்வப்போது ஏற்படும். இது போன்று எதிரிகளின் தொல்லை, கஷ்டங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட வராஹி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எதிரிகளை அழிப்பதற்கு வராஹி அம்மன் ருத்ர அவதாரம் எடுப்பாள். எதிரியின் தொல்லை நீங்குவதற்கு வராஹி அம்மனுக்குரிய மூல மந்திரத்தை தொடர்ந்து 26 நாட்கள் சொல்லி வழிபாடு செய்து வர அம்மனின் மொத்த அருளும் கிடைக்கும்.

வராஹி அம்மனை வழிபடும் முறை:

வெள்ளை நிற மொச்சைப் பருப்பை வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய் கலந்து நைவேத்தியமாக படைத்து வராஹி அம்மனை வழிபாடு செய்து வர வேண்டும். தொடர்ந்து இந்த வழிபாடு செய்து வர எதிரிகளின் தொல்லை நீங்கும். அதோடு, தன வசியமும் பெருகும். தொழில் விருத்தி அடைந்து நல்ல செழிப்போடு வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயம், எதிரிகளின் தொல்லை நீங்க வராஹி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவியை நமஹ

ஓம் ஹ்ரீம் பயங்கரி அதிபயங்கரி ஆச்சர்ய பயங்கரி

சர்வஜன பயங்கரி ஸர்வபூத பிரேத பிசாச பயங்கரி

ஸர்வ பயம் நிவாரய சாந்திர்பவதுமே ஸதா