எந்த தானம் செய்தால் என்னென்ன பலன் தெரியுமா?

51

எந்த தானம் செய்தால் என்னென்ன பலன் தெரியுமா?

பாவ, புண்ணியங்கள் நீங்க தான, தர்மம் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செய்த பாவம், புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு இன்ப, துன்பங்கள், கஷ்டங்கள் கிடைக்கிறது. சரி, என்னென்ன தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

தானங்கள் செய்தால் ஏற்படும் நன்மைகள்:

 1. எள்ளு தானம் செய்தால் – பாவ விமோட்சனம் கிடைக்கும்.
 2. பூமி தானம் செய்தால் – பிரம்மலோக தரிசனமும், ஈஸ்வரனின் தரிசனமும் கிடைக்கும்.
 3. மஞ்சள் தானம் செய்தால் – மங்களம் உண்டாகும்.
 4. ஆடை தானம் செய்தால் – நீண்ட ஆயுள் கிடைக்கும்.
 5. நெய் தானம் செய்தால் – வீடுபேறு அடையலாம், நோய் குணமாகும்.
 6. பால் தானம் செய்தால் – துக்கநிலை மாறும்.
 7. தேன் தானம் செய்தால் – பிள்ளைபேறு கிடைக்கும்.
 8. நெல்லிக்கனி தானம் செய்தால் – ஞானம் அதிகரிக்கும்.
 9. தேங்காய் தானம் செய்தால் – நினைத்த காரியம் வெற்றி அடையும்.
 10. பழங்கள் தானம் செய்தால் – புத்தி, சித்தி கிடைக்கும்.
 11. தங்கம் தானம் செய்தால் – தோஷம் நீங்கும், கோடி புண்ணியம் உண்டாகும்.
 12. வெள்ளி தானம் செய்தால் – மனக்கவலை நீங்கும், பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.
 13. அரிசி தானம் செய்தால் – பாவங்கள் தொலையும்.
 14. வெல்லம் தானம் செய்தால் – குலம் விருத்தியாகும்.
 15. தண்ணீர் தானம் செய்தால் – மனம் சாந்தி அடையும்.
 16. பசுமாடு தானம் செய்தால் – இல்லத்தின் தோஷங்கள் விலகும். பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
 17. சந்தனக்கட்டை தானம் செய்தால் – புகழ் கிடைக்கும்
 18. அன்னதானம் செய்தால் – சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும், தரித்திரமும், கடனும் தீரும்.

முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைகள் தீர தானங்களும் அதற்கான பலன்களும்….

 1. அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்மத்தில் செய்த கர்ம வினைகள் தீரும். பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
 2. காலணிகளை தானம் செய்தால் பெரியோர்களை நிந்தித்த பாவங்கள் நீங்கும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
 3. குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த பணத்தால் ஏற்பட்ட பாவங்கள் நீங்கும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிரிகாலம் கிடைக்கப் பெறலாம்.
 4. பாய் தானம் செய்தால், பெற்றவர்களை, வயதில் மூத்தவர்களை புறக்கணித்த சாபங்கள் தீரும். தீராத நோய்கள் தீரும். அமைதியான மரணம் ஏற்படும்.
 5. மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்.
 6. ஆடைகள் தானம் செய்தால் உறவுக் குற்றங்கள் நீங்கும்.
 7. பழங்கள் தானம் செய்தால் ஜீவன்களை வதைத்த சாபம் தீரும்.
 8. காய்கறிகள் தானம் செய்தால் பித்ரு சாபங்கள் நீங்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.
 9. அரிசி தானம் செய்தால் பிறருக்கு எதுவுமே தராமல் தனித்து வாழ்ந்து வந்த சாபம் தீரும். வறுமை தீரும்.
 10. எண்ணெய் தானம் செய்தால் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் தீரும். கடன்கள் குறையும்.
 11. பூ தானம் செய்தால், வசதி வாய்ப்பு காரணமாக மற்றவர்களை இழிவாக பேசிய பாவங்கள் நீங்கும்.
 12. மாங்கல்ய தானம் செய்தால் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கள் நீங்கும்.

சிலவகை தானங்களால் மறுபிறவியில் கிடைக்கும் பலன்கள்:

 1. கல்வி படிப்பிற்கு உதவி செய்தால், முன் ஜென்ம பாவங்கள் நீங்கும்.
 2. தங்கத்தை தானமாக கொடுத்தால் குறைவில்லாத ஐஸ்வர்யம் கிடைக்கும்.
 3. வெள்ளியை தானமாக கொடுத்தால் அழகான சரீரம் கிடைக்கப் பெறலாம்.
 4. எள் தானம் செய்தால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும். சந்தான பாக்கியம், சந்ததி விருத்தியடையும்.
 5. பசு தானம் செய்தால் குடும்பத்தின் பிறப்பு, தாயன்பு கிடைக்கப் பெறலாம்.
 6. பிராணிகளின் பசி, தாகம் போக்கினால், நோயற்ற வாழ்வு கிடைக்கப் பெறலாம்.
 7. தானியங்கள் தானம் செய்தால் குறையாத அன்னம் கிடைக்கும்.