எம பயம் நீங்க ஆகாச தீபம் வழிபாடு!

146

எம பயம் நீங்க ஆகாச தீபம் வழிபாடு!

கோயில்களில் இறைவழிபாட்டு பூஜைகளின் போது சாமிக்கு தீபாராதனை காட்டப்படும். இது பூஜையின் முக்கிய அங்கம். சாமிக்கு காட்டப்படும் தீபாராதனையின் போது அர்ச்சகர் பல வகையான தீபங்களை காட்டுவார்கள். தீபங்கள் பெரும்பாலும் பித்தளை உலோகங்களினால் செய்யப்படுகின்றன.

தீபாராதனைக்கு உரிய தீபங்கள் பெரும்பாலும் பித்தளை போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. ஒரு முக தீபம், அடுக்குத் தீபம், பஞ்சமுக தீபம், வில்வ தீபம், இடப தீபம், கும்ப தீபம், கற்பூர தீபம் என்று தீபங்களில் பல வகைகள் உண்டு. இது தவிர, தூபம், மஹா தீபம், நாக தீபம், விருஷப தீபம், அலங்கார தீபம், அஷ்வ தீபம், கற்பக விருட்ச தீபம், புருஷா மிருக தீபம், கஜ தீபம், சிம்ம தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், பூரண கும்ப தீபம், துவஜ தீபம், வ்யாக்ர தீபம், மேரு தீபம் என்பவையும் அடங்கும்.

பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர செய்ய வேண்டிய பரிகாரம்!

மாலா தீபம்:

இது அடுக்கு தீபம் ஆகும். மாலை போன்று தீப தட்டுகள் இருபுறம் அமைந்தும், கீழிருந்து மேலாக வட்ட அடுக்கடுக்காக பெரிய அளவு தொடங்கி சிறியனவாக இருக்கும்.

சித்திர தீபம்:

மாக்கோலம் போட்டு மணி விளக்குகளை ஏற்றி அதனை வட்டமாக அமைத்துக் கொண்டு தீப அலங்காரம் செய்தல் ஆகும்.

நவுகா தீபம்:

நவுகா என்பதற்கு படகு என்று அர்த்தம். படகு போன்று வடிவமைத்து, அதில் தீபம் ஏற்றி அதனை நீரில் மிதக்கவிடுவதைக் குறிக்கும்.

ஆகாச தீபம்:

உயரமான இடங்கள் அல்லது வீடுகளின் மொட்டை மாடியில் ஏற்றப்படும் தீபத்திற்கு ஆகாச தீபம் என்று பெயர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தீபாவளிக்கு முன்னும், கார்த்திகை மாத சதுர்த்தி நாளிலும் இந்த தீபத்தை ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த தீபம் ஏற்றி வழிபட்டால் எம பயம் நீங்கும். அதோடு கெட்ட கனவுகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம்.

சாமிக்கு காட்டப்படும் தீபங்கள் என்னென்ன தெரியுமா?

ஜல தீபம்:

தண்ணீரில் மிதக்கவிடும் சிறிய சிறிய தீப விளக்குகளை குறிப்பது ஜல தீபம். கங்கை நீரில் இது போன்ற தீபங்களை மிதக்கவிட்டு அது செல்லும் அழகை கண்டு மகிழ்வது உண்டு. வட இந்தியாவில் ஜல தீபங்கள் மிதக்கவிடுவதை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். பம்பா நதிக்கரையில் மகர சங்கராந்திக்கு முன்னதாக விளக்குகள் தண்ணீரில் மிதந்து வரும். இதனை பம்பா ஜலதீபம் என்றும், கும்ப தீர்த்த தீபம் என்றும் சொல்கின்றனர்.

சர்வ தீபம்:

வீடு முழுவதிலும் விளக்குகளை ஏற்றி வைத்து தீப பிரகாசம் ஒளிமயமாக திகழ்வதை சர்வ தீபம் என்கின்றனர்.

கோபுர தீபம்:

கோயில் கோபுரங்களின் மீது ஏற்றப்படும் தீபங்களுக்கு கோபுர தீபம் என்று பெயர். கார்த்திகை நாளன்று திருவண்ணாமலையில் உள்ள 2600 அடி உயரம் கொண்ட மலை மீது தீபம் ஏற்றப்படும். செப்புக் கொப்பறையில் நெய் ஊற்றி, கற்பூரம், கோடியான வெள்ளைத் துணி ஆகியவற்றுடன் தீபம் ஏற்றப்படும். இந்த தீபமானது பல மைல் தூரம் வரையில் பிரகாசமாக தெரியும். அதோடு, கொஞ்ச நாட்கள் வரையில் இந்த தீபமானது அணையாமல் இருக்கும். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவதும், மலை மீது மகா தீபம் சுடர்விட்டு எரிவதும் ஒன்றாகவே நிகழும். இது ஆகாச தீப தத்துவத்தை பிரகடனப்படுத்துவதாக இருக்கும்.

கார்த்திகை மாத விஷேச நாட்கள்!

ஏக முக தீபம்:

இந்த ஏக முக தீபத்தை பகவதி தீபம் என்றும், துர்கா தீபம் என்றும் கூறி வருகின்றனர். சர்வ சக்திகளும், தன்னுள் இருக்க, தான் ஒருத்தியே ஏகமாக பிரகாசிப்பதை ஏகமுக தீபம் குறிக்கிறது. ஆகையால், தான் துர்கா பூஜையின் போது ஏக முக தீபமும், லலிதா சஹஸ்ரநாம பூஜைக்கு ஐந்து முக தீபமும் பயன்படுத்தப்படுகிறது.

நிம்ப தீபம்:

இலுப்பை எண்ணெய் ஏற்றி இந்த தீபம் ஏற்றப்படுகிறது. பொதுவாக பேய்கள் அகலுவதற்கு நிம்ப தீபம் ஏற்றுவார்கள். மேலும், மாரியம்மனின் அருள் கிடைக்க நிம்ப தீபத்தை முறைப்படி ஏற்ற வேண்டும். வீடுகளில் இந்த தீபத்தை ஏற்றலாம். விளக்கெண்ணெய், இலுப்ப எண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் கலந்த எண்ணெய் ஆகியவை பஞ்ச தீப எண்ணெய்கள் ஆகும். இந்த பஞ்ச தீப எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.