எலும்பு கோளாறு நீங்க செல்ல வேண்டிய கோயில்!

87

எலும்பு கோளாறு நீங்க செல்ல வேண்டிய கோயில்!

உடும்பின் வால் வடிவ சிவலிங்கம் கொண்ட சுயம்புநாதர்-பிரம்மன், இந்திரன், சந்திரன் வழிபட்ட தலம் – மாகரன் என்ற அசுரன் பூஜித்த கோவில் – காசிபர், அகத்தியர் வழிபட்ட ஆலயம் – சோழன், பாண்டியன் திருப்பணி செய்த திருக்கோவில் – தேவாரப்பாடல் பெற்ற தலம் – எலுமிச்சை மரத்தை தல விருச்சமாகக் கொண்ட கோவில் – எலும்புக் கோளறு நிக்கும் பரிகரதலம் – விமானத்தில் வீணை ஏந்திய தட்சினமுர்த்தி எழுந்தருளிய கோவில் – கல்வெட்டுகள் நிறைந்த தலம் – யானை மீது முருகன் காட்சி தரும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகளின் பொக்கிஷமாக திகழ்வது, திருமாகறல் திருக்கோவில்.

கோவில் அமைவிடம்:

காஞ்சிபுரத்தில் இருந்து தெற்க்கே 16 கீ.மீ. தொலைவில் திருமாகறல் அமைந்துள்ளது. காஞ்சீபுரம் – உத்திரமேரூர் வழித்தடத்தில் நிறைய பேருந்து வசதி உண்டு. அவை அனைத்தும் திருமாகறல் வழியே செல்வதால், இத்தலத்திற்கு எளிதில் சென்று வரலாம்.

இறைவனும் – உடும்பும்

இறைவனின் திருவுருவம் வேறெங்கும் காண முடியாதபடி உடும்பின் வால் வடிவமே சிவலிங்கமாக காட்சி தருவது அபூர்வமான ஒன்று. இதற்கு புராண வரலாறு உண்டு. தானோ முதன்மையானவன் என் செருக்குற்ற பிரம்மன் படைப்புத் தொழில் ஆற்றலை மீண்டும் பெற்று, சத்தியலோகம் செல்லும்போது, இத்தலத்தில் உள்ள வேனுபுரத்தில் நாள்தோறும் பழம் தருகின்ற அதிசயப் பலாமரம் ஒன்றை பிரம்மன் உவ்ருவாக்கி சென்றான்.

இந்த அதிசயத்தைக் கண்டு வியப்படைந்த சோழ மன்னன், இக்கனியை நாள்தோறும், சிதம்பரம் தில்லை நாதனக்கு படையலுக்கு அனுப்பி, அப்பிரசாத்தை தனக்குக் தர வேண்டும் என கட்டளையிட்டான். இவ்வேலையை அவ்வூர் மக்கள் முறைவைத்து தினமும் செய்ய ஆணையிட்டான். தொடர்ந்து நாள்தோறும் வந்து கொண்டு இருந்த பிரசாதம் ஒரு நாள் வரவில்லை. காரணம் கேட்டபோது, தினமும் கால்நடையாக எடுத்து வரவேண்டுய நிலையில், சிறுவனின் முறை வந்த நாளன்று வெருப்படைத்த சிறுவன் இம்மரத்தை தீயிட்டுக் கொளுத்தி விட்டதாகக் சேதி வந்தது.

கோபமடைந்த மன்னன், அச்சிறுவனை நாடு கடத்த உத்தரவிட்டான், மன்னனின் நேரடிப் பார்வையில் அரசனின் ஆணைப்படியே காவலர்கள் இரவோடு இரவாக சிறுவனை நாடு கடத்தினர்.

இத்தலத்திற்கு தன் படையாட்களுடன் திரும்பிய நிலையில், பொன் நிற உடும்பு  ஒன்று மன்னனின் கண்ணில் பட்டது. அது வேகமாக சென்று புற்றினுள் தன்னை நுழைத்துக் கொண்டது. ஒளிவீசிய அந்த உடும்பைப் பிடிக்க மன்னன் ஆணையிட, புற்று இடிக்கப்பட்டது.

அப்போது உடும்பின் வாலில் ஆயுதம் பட்டு ரத்தம் பீறிட்டது. மன்னன் மயங்கி வீழ்ந்தான். மயக்கம் தெளிந்த மன்னன் மயங்கி வீழ்ந்தான். மயக்கம் தெளிந்து மன்னனுக்கு அந்த உடும்பு இறைவன் என்பது புலப்பட்டது. அதனை அசரீரி ஒன்று உறுதி செய்தது. தனக்கு இதே இடத்தில ஆலயம் எழுப்ப கட்டளை கிடைத்தது. அதன்படியே மிகப் பெரிய சிவாலயத்தை எழுப்பி, சோழ மன்னன் வழிபட்டு வந்தான்.

இந்த உடும்பு புற்றினுள் நுழைவதை குறிக்கும் விதத்தில், வால் பகுது மட்டும் வெளியில் தெரியும் நிலையில் அபூர்வ சிவலிங்கமாய் இறைவன் காட்சி தருகிறான். இதனை நினைவுபடுத்தும் விதமாக ஆலய முன் மண்டபத் தூணில் உடும்பின் படைப்புச் சிற்பம் இன்றும் காணப்படுகிறது.

மாகறல் – பெயர்க்காரணம்:

இத்தலத்தில் மாகறன் மற்றும் மலையன் என்ற இரண்டு அசுரர்கள் சிவனை வழிபட்டு பேறு பெற்றனர். இதில் மாகறனின் பெயரிலேயே இறைவன் அழைக்கப்படுகிறான். மாகறன் என்பது மாகறல் என மருவி, திரு என்ற அடைமொழியோடு திருமாகறல் என இத்தலத்திற்கு பெயர் வந்தது.

கல்வெட்டுக்கள்:

இந்தியத் தொல்லியில் துரையின் கி.பி 1901 – ல் மேற்கொண்ட ஆய்வில் பதினாறு கல்வெட்டுக்கள் இங்கு கண்டறியப்பட்டது.

அதன் மூலம் சோழன், பாண்டியன் என பலரும் திருபநிசெய்வது தெரிய வருகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டல, எயிற்கோட்ட மாகறல் நாட்டில் உள்ள மாகறல் என இவ்வூர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

யானை மீது முருகன்:

சூரபத்மனை வென்ற ஆருமுகம்ப் பெருமானுக்கு, தெய்வ யானைக்கும், திருபரன்குன்றம்த்தில் திருமணம் நடந்தது. இந்திரன் முருகப் பெருமானையும், தெய்வ யானையும், அவர்களின் திருமனம்க் கோலத்தோடு வெள்ளை யானை மீது அமரச் செய்து அக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்.

இதே காட்சியினை மாகறலில் வேண்டுகோள் விடுக்க. அக்காட்சி திருமாகறலில் அமைந்தது. இதனை நினைவுபடுத்தும் விடத்தில் யானை மீது அமரிந்து முருகன் எழிலுடன் காட்சி தருகின்றான்.

எலும்புக் கோளாறு நீக்கும் பரிகாரத் தலம்:

இத்தலம் எலும்பு தொடர்பான அத்தனை கோளாறையும், குளறுபடிகளையும் நீக்கும் பரிகராத் தலமாக விளங்குகிறது. இது தவிர பக்கவாதம், ரத்தம் தொடர்பான நோய்கள் போன்றவற்றிக்கும் பரிகாரத் தலமாக திகழ்கிறது.

இறைவன் திருமாகறலீசன்:

கிழக்கு நோக்கிய உடும்பின் வால்வடிவில் அபூர்வமாய் இறைவன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைகிறது. இறைவனுக்கு உடும்பிசன், புற்றிடங் கொண்டநாதன் அகஸ்தீஸ்வரன், பார்த்தலும்பன், ஆபத்துகாப்பவன், பரிந்து காப்பவன், மங்கலங்காத்தவன், மகம் வாளிவித்தநாதன், தடுத்தாட் கொண்ட நாதன் என பல்வேறு பெயர்கள் வழக்கில் உள்ளன.

இறைவன், இந்து நிலை ராஜகோபுரதினை நோக்கி கிழக்கு முகமாய் காட்சி தருகிறான். இறைவியின் திருப்பெயர் திருப்புவன நாயகி. எலுமிச்சை, தல மரமாகவும், தீர்த்தம், அக்னி என்று அழைக்கப்படுகிறது.

தரிசன நேரம்:

நான்கு கால பூஜை நடைக்கு இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்து இருக்கும்.