ஏன் பெளர்ணமி நாளில் விரதம் இருந்து கிரிவலம் செல்கிறோம்?

139

ஏன் பெளர்ணமி நாளில் விரதம் இருந்து கிரிவலம் செல்கிறோம்?

பெளர்ணமி தினத்தில் பொதுவாக அம்மன் வழிபாடு செய்வதற்கான நாளாக பார்க்கப்படுகிறது. அன்றைய நாட்களில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்படுவதும், அன்னதானம் நடைபெறுவதும் வழக்கம். முக்கியமாக பெளர்ணமி அன்று விரதம் மேற்கொள்ளப்படுவது உண்டு.

சித்திரை பௌர்ணமி:

பெளர்ணமிகளில் சித்ரா பெளர்ணமி மிக விசேஷமாக, பிரகாசமாக இருக்கக்கூடிய நாள். சித்திரை மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமிக்கு பெயர் சித்ரா பெளர்ணமி ஆகும். சித்ர குப்தனின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்த நாளில், பல சிவாலயங்களில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய ஆயுள் பெருகும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

சித்ரா பெளர்ணமி சிறப்புக்களும், வழிபாடு முறை: பெளர்ணமி கிரிவலம்:

பொதுவாக மலையிலும், மலையை ஒட்டியுள்ள ஆலயங்களில் பெளர்ணமி கிரிவலம் செய்யப்பட்டு வருகிறது. பெளர்ணமி நாளில் மலையை சுற்றி வருவதால் நம் மனதில் அமைதியும், உடலுக்கு ஆரோக்கியமும் உண்டாகும்.

சித்ரா பெளர்ணமி தினத்தில் பாவ புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தனை வழிபடும் விரத முறை அதிலும் குறிப்பாக கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும் போது, நமக்கு நேர்மறை சக்தி அதிகரிக்கிறது. நம் ஆன்ம பலமும், தேக பலமும் அதிகரிக்கும்.

பெளர்ணமி தினத்தில் பொதுவாக கிரிவலம் செய்வது சிறப்பானது. அதிலும் கார்த்திகை பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.