ஏழரை சனி என்ன செய்யும்? கெடுக்குமா? கொடுக்குமா?

38

நளன் தமயந்தி கதையை கேள்வி பட்டு இருப்போம் , அந்த கதையை அறிந்தவர்களுக்கு ஏழரை சனியின் தாக்கங்கள் தெரியும் . நமது ஊர்களில் பெரியவர்கள் சொல்லி கேட்டு இருப்போம் 30 வருடம் வாழந்தவனும் இல்லை , 30 வருடம் வீழந்தவனும் இல்லை என்று இதன் பொருள் சனி கிரகம் சூரியனை சுற்றி வர சுமார் 28 முதல் 30 வருடம் எடுத்து கொள்ளும் . அந்த 30 வருட சுழற்சியில் பல நபர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் . நன்றாக வாழந்த செல்வந்தர்கள் , அரசியல்வாதிகள் , நடிகர்கள் கூட இதற்கு விதி விலக்கு அல்ல . சென்ற வருடம் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த ரஜினிகாந்த் திடீர் என்று பின்வாங்கி பின்னர் உடல் நலம் பாதிக்கபட்டு இருப்பதை அறிந்து வைத்து இருப்பீர்கள் . அதற்கு சென்ற வருடம் அவருக்கு நடந்த ஜென்ம சனியின் தாக்குதலே காரணம் . இந்த மாதுரி பல உதாரணங்களை கூறலாம் .

முதலில் ஏழரை சனி என்றால் என்ன மற்றும் அதன் பாதிப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். அதற்கு முன் ஜோதிடத்தின் அடிப்படையான ராசி மற்றும் லக்கினத்தை பற்றி தெரிந்து கொள்வோம் .பொதுவாக நாம் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து நம் ஜாதக கட்டம் கணிக்கபடுகிறது . நமது ஜோதிடத்தின் மூல ஒளி கிரகமான சூரியனும் , நாம் வாழும் பூமிக்கு மிக அருகில் இருக்கும் துணை ஒளி கிரககமான சந்திரன் சூரியனிடம் இருந்து வரும் ஒளியை எதிரொலித்து பூமிக்கு ஒளி வழங்குகிறது . இதில் நாம் பிறந்த நேரத்தில் சூரியனின் கதிர்கள் விழும் ராசியை ஜென்ம லக்கினம் எனவும் , நாம் பிறந்த ராசியில் சந்திரன் இருக்கும் நம்முடைய ஜென்ம ராசி எனவும் கருதப்படும் . அதிலும் சந்திரன் இருக்கும் நட்ச்சத்திரம் ஜென்ம நட்சத்திரம் எனவும் குறிக்கப்படும் . இந்த ஜென்ம ராசிக்கு பின் ராசி , ஜென்ம ராசி மற்றும் அதற்கு அடுத்த ராசியில் சனி சஞ்சாரம் செய்யும் காலமே 7 1/2 சனி எனப்படும் .

சனி இந்த கட்டத்தில் , பிறந்த ஜாதகரின் ஜாதக கட்டம் மற்றும் அவருக்கு நடக்கும் தசா புத்திக்கு ஏற்ப கொடுமைகள் மற்றும் பாடங்கள் இருக்கும் . பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் சனி சுப ஒளி தொடர்புவுடன் இருந்தால் அவருக்கு பாதிப்புகள் குறைவாக இருப்பதை காணலாம் . ஜோதிடத்தை நம்பாதவர்கள் கூட இப்பொழுது மகர ராசி திருவோண நட்சத்திர நபர்களிடம் தற்பொழுது எப்படி இருக்கீர்கள் என்று கேட்டு உறுதி படுத்தி கொள்ளலாம் .
விரய சனி கால கட்டம் : ஜென்ம ராசிக்கு முன் ராசியில் இருக்கும் நிலை – விரய சனி எனப்படும் தற்பொழுது கும்ப ராசியினர் விரய சனியில் உள்ளனர் . இது கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது . சொந்த ஜாதகத்தில் சுப ஒளி தொடர்பு உடன் இருக்கும் இளம் பருவ கும்ப ராசியினர் இந்த விரய சனியில் ஒரு நல்ல வேலை கிடைத்து அதன் மூலம் விரய செலவுகளை செய்ய தொடங்கி இருப்பார்கள் . நடுத்தர வயது மக்கள் அவர்களின் வேலைக்கு ஏற்ப ப்ரோமோஷன் மற்றும் பணி இட மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கும் . சனி பாவ ஒளி தொடர்ப்பில் இருபவர்களுக்கு இது அப்படியே தலைக்கீழாக நடக்கும் .

ஜென்ம சனி கால கட்டம் : ஜென்ம சனியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி இருக்கும் நிலை ஜென்ம சனி எனப்படும் . இந்த கால கட்டங்களில் நமக்கு மனதிற்கு புடிக்காத நிகழ்ச்சிகள் பல நடைபெறும் . விரய சனி காலத்தில் என்ன புதிதாக கிடைத்ததோ அதன் மூலம் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடக்கும் . இளம் வயதில்
இருபவர்களுக்கு காதல் மூலம் மன அழுத்தம் அல்லது சரியான வேலை கிடைக்காமல் அலைக்கழித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெரும் . குறிப்பாக இந்த கால கட்டத்தில் நம் கூட இருந்து குழி பறிப்பவர்களை நம்பிக்கை துரோக நிகழ்வுகள் மூலம் நம் கண்டு அறியும் நேரமாக இருக்கும் . இந்த கேடு பலன்கள் கூடுதல் மட்டும் குறைவு அவர்களின் தசா புத்திக்கு ஏற்ப இருக்கும் . தற்பொழுது மகர ராசி திருவோணம் நட்சத்திரம் கொண்டவர்கள் ஜென்ம சனியை அனுபவித்து வருகிறார்கள் .

பாத சனி கால கட்டம் : பாத சனியில் இது வரை நடைபெற்ற சனியின் பாதிப்புகள் குறைய தொடங்குகிற கால கட்டம் . பாத சனி கால கட்டத்தில் நாம் அடுத்த நகர்வை உணரும் காலமாக இருக்கும் . வாய்ப்புகள் வர தொடங்குகிற கால கட்டமாகவும் இருக்கும் . இருந்த போதும் , நமது வாக்கு மற்றும் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் நடைபெரும் காலமாக இருக்கும் . தற்பொழுது தனுசு ராசியினருக்கு பாத சனி நடைபெற்று கொண்டு உள்ளது .

முக்கிய குறிப்புக்கள் :
1. 15 வயதுக்கு குள் வரும் முதல் சுற்று ஏழரை சனி கணக்கில் ஈடுபடுவது இல்லை நமது ஜோதிட அனுபவத்தின் படி ,
2. 40 வயதுக்கு மேல் வரும் ஏழரை சனி பெரிய பாதிப்புகள் தருவது இல்லை ஆனாலும் ஜென்ம நட்சத்திரத்தில் போகும் போது அந்த ஒரு வருடம் பாதிப்புகள் ஏற்படுகிறது .
3. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒரே நேரத்தில் ஏழரை சனி நடைபெறும் போது அது அந்த குடும்பத்தின் தலைவரை மற்றும் அவரின் தொழிலில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது .
4. நீங்கள் தனுசு , மகர மற்றும் கும்ப ராசியில் இருந்து துன்பபடுகிறீர்களா ? உங்களுக்கு ஜோதிட ஆலோசனைகள் வேண்டுமா ? தொடர்ப்பு கொள்ளுங்கள் – +91 96677824799 என்ற எண்ணுக்கு whatsapp மூலம் தொடர்ப்பு கொண்டு பயன் பெறுங்கள் .

உங்கள் இல்லத்துக்கு பக்கத்தில் இருக்கும் விநாயகர் அல்லது ஆஞ்சநேயரை வணங்கி ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து விடுபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் .