ஐயப்பனைப் போன்று 18 படி மீது அமர்ந்திருக்கும் காமாட்சி அம்மன்!

114

ஐயப்பனைப் போன்று 18 படி மீது அமர்ந்திருக்கும் காமாட்சி அம்மன்!

தர்மபுரி மாவட்டம் தருமபுரி என்ற ஊரில் உள்ள கோயில் கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் கல்யாண காமாட்சி மூலவராக காட்சி தருகிறாள். நவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி, சண்டி யாகம், அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் சூலினிக்காக அமைக்கப்பட்ட கோயில் என்பதும், அம்மன் 18 படிகளுக்கு மேல் நின்று அருள்பாலிப்பதும் கோயிலின் சிறப்பாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் 3ஆவது செவ்வாய்க்கிழமையில் மட்டுமே மாலை 4.30 மணி முதல் 9 மணி வரையில் அம்மனை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். அம்மனின் திருமுகம் தவிர மற்ற பாகங்களை தரிசிப்பது என்னவோ நடைமுறையில் இல்லை. ஒவ்வொரு நாளும் பூஜை செய்யப்படும் போது திரையிட்டு தான் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

கண் திருஷ்டி நீங்க, சாபம் விலக, கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்க, வியாபார விருத்தி அடைய வளர்பிறை அஷ்டமியில் ஸ்ரீ சூலினி ராஜ துர்க்கை திருஷ்டி துர்கா ஹோமம் செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து புதிய வஸ்திரம் சாற்றி பக்தர்கள் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.

கொற்றவை எனும் ஸ்ரீ ராஜ துர்காம்பிகையை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் வார்த்தைப்படி பலரும் நாட்டின் நன்மைக்காக பிரார்த்தித்து தவம் இயற்றி உள்ளார்கள். நாட்டின் இறையாண்மைக்கு ஊறு வரும் போது சூலினிக்கான கொற்றவை வழிபாட்டைச் செய்து தன்னுயிர் மாய்த்துப் பூஜையை நிறைவு செய்து நாட்டை காத்துள்ளார்கள். அந்த வகையில் நலகண்டம் என சூலத்மேலிருந்து பூஜித்து வர மரணம் வரும் வேளையில் மேலிருந்து கீழே வீழ்ந்து உயிர் போகும் நிலையில் கொற்றவை தெய்வம் நேரில் வந்து தனது இடக் கரம் நீட்டி அந்தரத்தில் வாயுஸ்தம்பனம் நிலையில் காத்தருளி அற்புதம் நிகழ்த்தி இருக்கிறாள்.

இதனாலேயே பிற்காலத்தில் சூலத்தில் எழுமிச்சைக்கனியை செருகி வழிபாடு செய்யும் பழக்கம் தமிழ்நாட்டில் இத்தருமபுரி பகுதியிலிருந்தே பரவியுள்ளதாக வரலாறு. இதை நிரூபிக்க இக்காட்சியை சித்தரித்த தூண் தொங்கும் தூணாக இன்றளவும் இந்த சிவன் கோயிலில் அதிசய தூணாக காட்சியளிக்கிறது. சூலினிக்கான பழமையான மூன்று சூலங்களைக் கொண்டு திரு அருள் புரியும் இந்த ஆலயத்தில் தை மாதத்தில் அன்னையின் திரு அருள்படி தை மாதம் மூன்றாவது வெள்ளிக்குப் பிறகு வருடா வருடம் ஸ்ரீ சண்டி யாகம் சூலினிக்கென பக்தர்களால் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பிரதி ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ராகு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

தர்மர் வழிபட்டதால் இந்த ஊருக்கு தருமபுரி என்று பெயர் வந்தது. மேலும், இந்தக் கோயிலுக்கு மாத்ரு மந்திர் என்றும் பெயர் உண்டு. உலகில் தாய் வழிபாட்டின் பெருமையை விளக்க கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ அன்னை ஜெய ஜெய காமாட்சி, கல்யாண காமாட்சி, ஐக்ய நிலையில் சிவசக்தி ஐக்ய சொரூபமாக பஞ்ச பிரம்மாசானத்தில், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் நான்கு கால்களாக சதாசிவர் மேற் பலகையாக மேல் நின்று அன்னை அனுக்ரஹிக்கும் நிலையில் நாம் தரிசிக்கும் ஒரே தலம், 18 படிகளுக்கு மேல் அன்னையின் திருக்கோயில் கருவறை அமைந்துள்ளது.

பிரதோஷ புண்ணிய காலத்தில் உமையோடு கூடிய தம்மை தாமே வலம் வருகையில் சிவசக்தி ஐக்கிய நிலையை உணர்த்தி 18ம் படி அருகே அன்னை கல்யாண காமாட்சி ஆலயத்தை வலம் வந்து காட்சியளிப்பது காணக்கிடைக்காத அபூர்வ காட்சியாகும். ஒவ்வொரு நாளும் அம்மனின் இந்த 18 படிக்கு தண்ணீர் கொண்டும், மலர் கொண்டும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர்.

அன்னை ஆதி காமாட்சியை திருக்கோயில் வலம் வர திருப்பாதம் தாங்கி வருபவர்களும், குடை எடுப்பதும் பெண்களே. தாய்மையின் பெருமையைக் குறித்த ஆலய அமைப்பும், பூஜை முடிவுகளும் அம்பிகைக்கே முதலிடம் ஆதலால், தாய் மண், தாய்மொழி போன்று தாய்க்கோயில் மாத்ரு மந்திர் என்று போற்றப்படுகிறது. மற்றொரு விசேஷம் என்னவென்றால், இந்த காமாட்சி தருமபுரி கல்யாண காமாட்சி என்று போற்றப்படுகிறாள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி கல்யாண மாலை வேண்டுவோர் 5 அஷ்டமிகளில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தால் விரைவில் திருமண பாக்கியம் கை கூடி வரும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ தருமபுரி கோட்டை கோயில் என்று அழைக்கப்படும் கல்யாண காமாட்சி கோயிலில் தருமர் முதலானோர் வழிபட்ட சூலினி ராஜதுர்கை தரிசிக்க வேண்டியவள். மகிஷனை வதம் செய்யும் நிலையில் சூரன் மனித உடலும், எருமைத் தலையும் கொண்டும், கத்தி கேடயம் ஏந்தி கீழே விழுந்த நிலையில் மூன்று வகை சூலங்களைக் கொண்டு அற்புதமாகக் காட்சி தருகிறாள். இது தமிழகத்தின் சூலினிக்கான ஒரே கோயில் ஆகும்.