ஒரு மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிக்கும் ஒரு நாள் வழிபாடு!

85

ஒரு மாதம்  முழுவதும் வருமானத்தை அதிகரிக்கும் ஒரு நாள் வழிபாடு!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்) சுபகிருது வருடம், ஆவணி  மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:-

19.8.2022 வெள்ளிக்கிழமை முழுவதும் ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை அல்லது ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவர் ஜெபம்   ஜபிக்கலாம்; இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானை   அல்லது ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவர் ஜெபம் துதிக்கலாம்; வெள்ளிக் கிழமை கிழமை ராகு காலம் காலை 10.30 முதல் 12 வரை வெள்ளிக்கிழமை குளிகை காலம் காலை 7.30 முதல்  9 வரை அமைந்திருக்கிறது.

இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது; படிப்படியாக வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பது அனுபவ உண்மை.

(தனுசு, மகரம், கும்பம், மிதுனம், கடகம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது; மதுவையும், போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்; முட்டையும் புரோட்டாவும் அசைவமே)

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோயில்களின் பட்டியல் இதோ:

1.அண்ணாமலை கோயிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில் (காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம் (கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி (இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்க முடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமல விநாயகர் ஆலயத்தினுள் (மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் (தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்கா பீடம் (படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

  1. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி (கொங்கணரின் ஜீவசமாதி இது)

13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி (சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்)

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில், ரத்தினசாமி நகர், ஆர்.எம்.எஸ்.நகர் அருகில், நஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்.

15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோயில், ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அருகில், புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம், சேங்கல்மலை, கரூர்.(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் பகுதி)

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோயில், ஞானமேடு, தவளக்குப்பம் அருகில், பாண்டிச்சேரி. வழித்தடம்: பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

  1. அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோயிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது. இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்) இங்கே இருக்கும் பொற்றளி பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!

18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோயிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோயில்.

19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில் வளாகம், ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்.

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோயில், காங்கேயநல்லூர், வேலூர் மாவட்டம் (பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர், ஆர்ச் அருகே இறங்கி நடந்து செல்ல வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோயில், கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன், அடையாறு, சென்னை (பேருந்து நிறுத்தம்: மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வாலாஜாபேட்டை

23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்.

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம், அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத் தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோயில்.

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம், துறையூர்.

26.ரெட் ஹில்ஸ், சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில், பழனி ஆண்டவர் கோயில் தெரு, பெரம்பூர்,சென்னை-11 (அமைவிடம்: பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம், காளமேகம் தெரு, மேற்கு முகப்பேர், சென்னை 37ல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.

30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோயில், மணப்பாக்கம், சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நங்கநல்லூர், சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்வர்ணஹர்ஷன பைரவர் சன்னதி, சனீஸ்வரன் கோயில் விதுன்னி தெரு, நூரணி போஸ்ட், பாலக்காடு, கேரளா

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில், பொன்னம்பலவாணேஸ்வரம், கொழும்பு, இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோயில், மேனாம்பேடு, அம்பத்தூர், சென்னை (800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோயில், லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை 14.

36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோயில், காந்திபுரம், கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோயில், கொம்மடிக்கோட்டை, திசையன்விளை; தூத்துக்குடி மாவட்டம்.

  1. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோயில், குடியாத்தம், வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர், ஹார்விப்பட்டி, மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோயில் வளாகம், மானாமதுரை

42. அருள்மிகு நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், பூந்தமல்லியில் இருந்து 15 கிமீ, தொலைவு, சென்னை.

43. அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம், படேல் தெரு, நேரு நகர், குரோம்பேட்டை, சென்னை.

44.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷணபைரவர் சன்னதி, அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம், மஹாராஜபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, விருதுநகர் மாவட்டம் (வத்ராப் டூ அழகாபுரி மார்க்கம்) சதுரகிரி மலை அடிவாரம்.

  1. அருள்மிகு செந்திலண்டவர் திருக்கோயில், சதுரகிரி செல்லும் சாலை (கிருஷ்ணன் கோயில் — வத்திராயிருப்பு செல்லும் சாலை) எஸ்.ராமச்சந்திராபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.
  2. ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில், மணிமூர்த்தீஸ்வரம், திருநெல்வேலி.

47. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதி,சொர்ணபுரி, திருவிசநல்லூர், கும்பகோணம் வட்டம்.

48.ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவர் சன்னதி, அருள்மிகு கருப்பசாமி கோயில், ஒட்டன் சத்திரம் சாலையில் 3 வது கிலோ மீட்டர், வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம். இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்; இருந்தால் தகவல் தெரிவிக்கவும்; அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது, இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்; ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீ கால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே

ஆகர்ஷ்ணாய தீமஹி

தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஹ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரம்;

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் க்ராம் க்லீம் க்லூம் ஹ்ராம்

ஹ்ரீம் ஹ்ரூம் குரு குரு ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷிணேஸானந்தாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

அல்லது

ஓம் பைரவாய பைரவகக்ஷனாய

குபேராய தன தான்யாதி பதயே நமக

சொர்ணம் தன தானியம் சம்ருத் மே

ததா பய ஸ்வாஹா

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.