ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த நிற பிள்ளையாரை வாங்க வேண்டும் தெரியுமா?

103

ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த நிற பிள்ளையாரை வாங்க வேண்டும் தெரியுமா?

பொதுவாக, எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னதாக விநாயகரை வழிபட்டு, பிள்ளையார் சுழி போட்டு தான் தொடங்குவார்கள். அப்படி தொடங்கும், செய்யும் தொழில், செயல்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். ஆனால், ஒரு சிலரது வாழ்க்கையில் முன்னேற்றம், வெற்றி என்பதே இருக்காது. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் வாழ்க்கையில் அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் ஏராளம்.

விநாயகர் சதுர்த்தியை வீட்டில் சிறப்பாக கொண்டாட படிக்க வேண்டிய பதிவுகள்!

அப்படி இருப்பவர்கள், இன்றைய விநாயகர் சதுர்த்தி நாளில் இந்த நிற பிள்ளையாரை வாங்கி வழிபட்டு பாருங்கள். நிச்சயமாக உங்களது வாழ்வில் இனி எல்லா நாளும், எல்லா காலமும் நல்ல நேரம், நல்ல காலம். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையார் சிலை வாங்கி வீட்டில் பூஜை செய்வது ஒவ்வொருவருடைய வழக்கம். இந்த வழக்கத்துடன் உங்களது ராசிக்குரிய நிறத்திலேயே மற்றொரு பிள்ளையாரை வாங்கி வழிபட இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும்.

களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை 3, 5 அல்லது 9 நாட்களில் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால், ராசிக்குரிய நிறத்தில் வாங்கியிருக்கும் பிள்ளையாரை கரைக்காமல் வீட்டிலேயே வைத்து தினந்தோறும் பூஜை செய்து வழிபட்டு வர வேண்டும்.

மேஷம்: இந்த ராசிக்காரர்கள், சிவப்பு நிறத்தில் இருக்கும் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் வெள்ளை நிறம் பூசப்பட்டிருக்கும் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து தினந்தோறும் பூஜை செய்து வழிபட வேண்டும்.

மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் பச்சை நிறம் பூசப்பட்டிருக்கும் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

கடகம்: இந்த ராசிக்காரர்கள் சந்தன நிறத்தில் இருக்கும் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து தினந்தோறும் பூஜை, புனஷ்காரங்கள் செய்து வழிபட வேண்டும்.

சிம்மம்: இந்த ராசிக்காரர்கள் நிறம் பூசாமல் இருக்கும் மண் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து வழிபட வேண்டும். அந்தப் பிள்ளையார் சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை.

கன்னி: இந்த ராசிக்காரர்கள் பச்சை நிறம் பூசப்பட்டிருக்கும் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

துலாம்: இந்த ராசிக்காரர்கள் வெள்ளை நிறம் பூசப்பட்டிருக்கும் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து தினந்தோறும் பூஜை செய்து வழிபட வேண்டும்.

விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் பச்சை நிறம் பூசப்பட்டிருக்கும் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

தனுசு: இந்த ராசிக்காரர்கள் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கும் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

மகரம்: இந்த ராசிக்காரர்கள், நீல நிறத்தில் இருக்கும் பிள்ளையாரை வாங்கி வழிபட வேண்டும்.

கும்பம்: இந்த ராசிக்காரர்கள், நீல நிறத்தில் இருக்கும் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டும்.

மீனம்: இந்த ராசிக்காரர்கள் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கும் பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் உங்களது ராசிக்குரிய நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பிள்ளையாருக்கு மண் அகல் விளக்கேற்றி வழிபட வேண்டும். மேலும், உலர் திராட்சை, கொழுக்கட்டை, கொண்டக்கடலை என்று நைவேத்தியம் படைத்து மனதார பிள்ளையாரை வணங்கி 3 முறை தோப்புக்கரணம், நெற்றியில் கொட்டிக் கொண்டும் வழிபட வேண்டும். அதோடு, விநாயகருக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். இப்படி ஒரு வருடம் செய்வதன் மூலமாக நீங்களே சம்ப முடியாத வகையில் பல அற்புதங்கள் உங்களது வீட்டில், உங்களது வாழ்க்கையில் நடக்கும்.

ஓராண்டிற்குப் பிறகு வரும் மற்றொரு விநாயகர் சதுர்த்தி அன்று அந்த விநாயகரை நீர் நிலைகளில் விட்டு விடலாம். அப்படியில்லை என்றாலும் ஏதாவது கோயிலின் மரத்தடியில் பிள்ளையாரை வைத்து விடலாம். இல்லையென்றாலும் கூட உங்களது வீட்டில் நீங்களே தொடர்ந்து பிள்ளையாருக்கு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபடலாம். தொடர்ந்து ஒரு வருடம் பிள்ளையாரை வழிபட்டதால், அத பிள்ளையாருக்கு சக்தி கூடியிருக்கும். ஆதலால், நீங்களே பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை.