கடன் தீர மிளகு, வரமிளகாய் உடன் சிவன் தரிசனம்!

447

கடன் தீர மிளகு, வரமிளகாய் உடன் சிவன் தரிசனம்!

கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு சிவன் கோயிலுக்கு மிளகாய் மற்றும் மிளகு ஆகியவற்றுடன் சென்று கடன் தீர பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரது வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவதும், கடன் பிரச்சனைகள் வருவதும் அவரவர் செய்த கர்ம வினைகள் தான் காரணம். முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்கள் தான் இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு துன்பங்கள், கஷ்டங்களுக்கு காரணம். பெற்றவர்கள் செய்த பாவ வினைகள் பிள்ளைகளை சேரும் என்பார்கள்.

பாவ, புண்ணியக் கணக்கு முடிந்துவிட்டாலே நமது கஷ்டங்கள் அதுவாகவே குறைந்துவிடும். சரி, இந்த பிறவியில் இருக்ககூடிய கடன் பிரச்சனை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? அதற்கு மிக எளிமையான வழி இருக்கிறது. தினமும் சிவ பெருமானை தரிசனம் செய்தாலே போதுமானது. என்ன சிவனை தரிசிக்கும் போது வீட்டிலிருந்து மிளகு கூடவே வரமிளகாய் கொண்டு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அதாவது, தொடர்ந்து 11 நாட்கள் சிவனை தரிக்கும் போது 3 வரமிளகாய், 3 மிளகு ஆகிய இரண்டையும் எடுத்துச் செல்ல வேண்டும். சிவனை தரிசனம் செய்து பிரகாரத்தை 3 முறை வலம் வர வேண்டும். சிவ வழிபாட்டை முடித்த பின்பு, நந்தி இருக்கும் இடத்தில் நின்று கொண்டு சிவனை பார்த்தவாறு நீங்கள் கொண்டு சென்ற 3 மிளகு மற்றும் 3 வரமிளகாய் ஆகியவற்றை வலமிருந்து இடமாக உங்களது தலையை 3 முறை சுற்ற வேண்டும்.

அந்த மிளகு மற்றும் வரமிளகாயை பேப்பரில் சுற்றி வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். வீட்டிற்கு வந்து மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு ஒன்றில் கற்பூரத்தை ஏற்றி அதில், இந்த மிளகு மற்றும் வரமிளகாயை 3 முறை சுற்றி வீட்டிற்கு வெளியில் வைத்து எரித்துவிட வேண்டும். அப்படி 11 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்களது கடன் பிரச்சனை படிப்படியாக குறையும் என்பது ஐதீகம்.

எனக்கு கடனே இல்லை என்று சொல்பவர்கள் கூட இந்த பரிகாரை 11 நாட்கள் செய்து வந்தால், உங்களது கர்மா தீர்ந்துவிடும். அதோடு நீங்கள் மோட்சத்தை அடையலாம் என்பது நிசத்தமான உண்மை.