கட்டிடங்கள் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?
- தோரணத்தோடு கூடிய வாசலை கனவில் கண்டால் நல்ல செய்தி தேடி வரப் போகிறது என்று அர்த்தம்.
- பாழடைந்த வீடோ, சிதிலமடைந்த வீடு கனவில் வந்தால் குடும்பத்தில் வீணான குழப்பங்கள் ஏற்பட்டு துன்பங்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- குடிசையில் வசிப்பது போல கனவு வந்தால் ஏழ்மையான நிலை ஏற்படும் என்று அர்த்தம்.
- நீதிமன்றம் கனவில் வந்தால் வழக்குகள் ஏற்படும் அல்லது அதனால் செலவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
- நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுவது போல் கனவு வந்தால் நோய்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- வீடு இடிந்து விழுவது போல கனவு கண்டால் உங்களின் உறவினர்களால் துன்பம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- புதிய வீடு வாங்குவது போன்று கனவு வந்தால் சுப காரியங்கள் நடக்கும்.
- ஆராய்ச்சிகள் செய்யும் ஆராய்ச்சிகூடம் கனவில் வந்தால் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.
- அணை உடைவது போன்று கனவு வந்தால் நண்பர்கள் மூலமாக குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- அணைக்கட்டு நிறைந்து அதிலிருந்து நீர் வழிவது போல் கனவு கண்டால் வந்தால் அதிக செலவுகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- ஜன்னலே இல்லாத வீடு கனவில் வந்தால் தேவையில்லாத சிந்தனைகள் மனதில் தோன்றியுள்ளது என்று அர்த்தம்.
- ஒரு உயரமான கட்டிடம் கனவில் வந்தால் உங்களுக்குள் உள் பிரச்சினைகள் இருப்பதை குறிக்கிறது.
- குடிசை தீப்பற்றி எரிவது போன்று கனவு வந்தால், வீட்டில் திருடு போகலாம் என்று அர்த்தம்.
- குடிசை கனவில் வந்தால், உங்களுக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரபோகிறது என்று அர்த்தம்.
- புதிய கட்டிடம் ஒன்றை கனவில் கண்டால் உத்தியோக மாற்றம் மற்றும் நற்பலன்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- தொழிற்சாலை கனவில் வந்தால் நீங்கள் புதிதாக ஒரு வியாபாரம் தொடங்க போகிறீர்கள் அல்லது பரம்பரை சொத்து வரபோகிறது என்று அர்த்தம்.
- நினைவுச் சின்னங்கள் இருக்கும் இடத்தில் நாம் நடந்து செல்வது போல கனவு வந்தால், ஏமாற்றம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- ஆசிரமம் கனவில் வந்தால், உங்களின் மனம் அமைதி இழந்து இருக்கிறது என்று அர்த்தம்.
- நீங்கள் வீடு கட்டுவது போன்று கனவு வந்தால், பல சோதனைகள் வரப்போகிறது என்று பொருள்.
- உங்கள் கனவில் சிறை வந்தால் புதிய பிரச்சனை உருவாக போகிறது என்று அர்த்தம்.
- மருத்துவமனை கனவில் வந்தால் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
- ஆடம்பரமான மாட மாளிகை கனவில் வந்தால் சமுதாயத்தில் உள்ள பெரிய பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.