கண் திருஷ்டி விநாயகரை இப்படி வைக்கலேன்னா வறுமை தான் வரும்!

197

கண் திருஷ்டி விநாயகரை இப்படி வைக்கலேன்னா வறுமை தான் வரும்!

வீட்டின் முன் எதாவது வைக்க வேண்டும் இல்லையென்றால் கண் திருஷ்டிபடும் என்பது நம்பிக்கை. சிலர் அதற்காக கண் திருஷ்டி பிள்ளையார் படத்தை வீட்டின் முன்பு வைப்பது உண்டு.

பிள்ளையார் படத்தை வைத்தால் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். கண் திருஷ்டி பிள்ளையார் படத்தை வீட்டில் முன் தலை வாசலுக்கு எதிராக, வருபவரின் கண்ணில் படும்படி சிலையை வைப்பது உகந்தது.

அப்படி வீட்டில் வைப்பதால் சிலர் தீய எண்ணத்துடன் நுழையும் போது, பொறாமை கொண்டோ, வரும் போது அதன் தீய சக்திகளை தடுத்து, அவர் வீட்டை பாதுகாக்கும் துணைவராக சக்தியுடன் இருந்து செயல்படுவார். இந்த கண் திருஷ்டி விநாயகரை வீட்டின் முகப்பு வாயிலில் வைக்கும் போது ஜோடியாக வைக்க வேண்டும். அதில் ஒன்று நுழைவு வாயிலைப் பார்த்த படியும், மற்றொன்று அதற்கு எதிர் புறமாக பார்த்தபடி இருக்க வேண்டும்.

எதற்காக இரு சிலைகளை வைக்கின்றோம் என்றால் எந்த ஒரு கடவுள் நிலையாக இருந்தாலும், அதன் பின்புறம் நம் வீட்டை பார்த்தால் நமக்கு வறுமை வந்து சேருமாம். அதனால் அதனை ஈடு செய்யும் வகையில் மற்றொரு சிலையை எதிர்த்திசையில் வைக்க வேண்டும்.