கண் பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய கோயில்!

46

கண் பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய கோயில்!

திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எண்கண் திருத்தலம். இங்கு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப்பெருமானே பிரதான தெய்வமாக இருக்கிறார்.

முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம் கொண்டிருக்கிறார். பன்னிரு கரங்களில், வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.

மூலவரான ஆறுமுகப்பெருமான், மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை இருவரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.

இத்தலத்தில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், இறைவனை வேண்டி வழிபட்டால் அந்தக் குறை விரைவில் அகலும் என்பது நம்பிக்கை. கண்பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசாக நட்சத்திரம் அன்றும், குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு ‘சண்முகார்ச்சனை’ செய்து வழிபட வேண்டும்.

இப்படி தொடர்ந்து 12 மாதங்கள் வழிபட்டால் கண் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம். விஷக்கடி மற்றும் ஆஸ்துமா நோய்களைக் களையும் பூவனூர் அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில்

வசுதேவன் என்ற மன்னன் மனைவி காந்திமதியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி சிவாலயங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தான். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று இருவரும் மனமுருகி வணங்கினர்.

இவர்களின் வேண்டுதலை ஏற்ற இறைவன் பார்வதியை அவர்களுக்கு குழந்தையாக பிறக்கும்படியும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியை குழந்தைக்கு செவிலித்தாயாக இருக்கும்படியும் அருள்புரிந்தார்.

ஒரு முறை மன்னன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடும் போது பார்வதி தேவி அங்கிருந்த தாமரையில் சங்கு வடிவில் தோன்றினாள். மன்னன் அந்த சங்கை கையில் எடுத்தவுடன் அது குழந்தையாக மாறியது.

இதனால் மன்னனும் ராணியும் மகிழந்து குழந்தைக்கு “ராஜராஜேஸ்வரி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். இறைவன் அருளின்படி சப்தமாதர்களுள் ஒருவரான சாமுண்டீஸ்வரி குழந்தைக்கு வளர்ப்புதாயாக இருந்தாள்.

குழந்தை சகல கலைகளையும் கற்று தேர்ந்தது. குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்பவர் யாருமில்லாதபடி திகழ்ந்தாள்.

இதையறிந்த மன்னன் தன் மகளை சதுரங்க விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே மணமுடிக்கப்படும் என அறிவித்தான். ஆனால் இவளை சதுரங்கத்தில் யாரும் ஜெயிக்கவில்லை.

அக்காலத்தில் முனிவர் ஒருவர் அறிவுரையின்படி தன் மகள், வளர்ப்புத்தாய் சாமுண்டி, ராணி மற்றும் பரிவாரங்களுடன் மன்னர் தல யாத்திரை மேற்கொண்ட போது பூவனூர் என்ற இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தார்.

அப்போது இறைவன் சித்தர் வேடத்தில் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்று தெரிவித்தார். மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு வேண்ட இறைவனும் ராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வென்று தன் உண்மையான வடிவுடன் அனைவருக்கும் தரிசனம் தந்தார்.

இதனால் மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தார். இதனால் இத்தலத்து இறைவன் சதுரங்க வல்லப நாதர் எனப்படுகிறார். அம்பிகை ராஜேஸ்வரியும், வளர்ப்புத்தாய் சாமுண்டியும் இத்தலத்தில் தனித்தனி சன்னதிகளில் இருந்து அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் என வேண்டிக்கொள்ள இறைவனும் அவ்வாறே அருள்புரிந்தார்.

விஷ்ணு, பிரம்மா, இந்திரன், விநாயகர், முருகன், சுகமுனிவர், அகத்தியர் ஆகியோர் பூஜை செய்துள்ளனர்.

பிரார்த்தனை:

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை. பணம் கொடுக்கல் வாங்குதலில் பிரச்னை, திருமணத்தடை, குழந்தை பாக்கியத்திற்கு சாமுண்டீஸ்வரியை வழிபாடு செய்வது சிறந்த பலனைத்தரும்.

எலிக்கடி மற்றும் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து கையில் வேர்கட்டிக்கொண்டு கோயிலின் எதிரிலுள்ள தீர்த்தத்தில் நீராடி நலம் பெறுகின்றனர்.

முகவரி:

அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோயில், பூவனூர்-612 803 நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.