கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன்கள்?

139

கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன்கள்?

பொதுவாக தூங்கும் போது நடு இரவில், அதிகாலை நேரத்தில் கனவு வரும். நமது கனவில் வரும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள், அர்த்தங்கள் உண்டு. நம் வாழ்க்கையில், நடக்கப் போகும் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்தும் வகையில் அந்த கனவு இருக்கும் அதற்கேற்ப பலன் இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்காலத்தில் நடப்பது கூட கனவாக வரும்.

தேவையற்ற சிந்தனைகளை எல்லாம் விட்டு விட்டு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இறைவனை கதி என்று இருந்துவிட்டால் அவர்களுக்கு கடவுள் கனவில் காட்சி தருவார் என்பது நம்பிக்கை. கடவுல் நம் கனவில் வந்தால் நடக்கப் போகும் சம்பவங்கள் முன் கூட்டியே தெரிவிக்கப்போகின்றது. கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன் அறிகுறி என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

விநாயகர் கனவில் வந்தால்

உங்களின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் அல்லது முடிந்து விட்டது என்று அர்த்தம்.

முருகன் கனவில் வந்தால்

உங்களது எல்லா தோஷங்களும் நீங்கி விட்டது என்பது பொருள். உங்களுக்கு நடப்பவை எல்லாம் நன்மையாகவே நடக்கும்.

அம்பாள், அம்மன் கனவில் வந்தால்

அம்மன், அம்பாளின் பரிபூரணமான அருள் உங்களுக்கு கிடைத்து விட்டது என்று அர்த்தம்.

திருநீறு பூசுவது கனவில் வந்தால்

திருநீறு பூசுவது போன்று கனவு வந்தால், ஞானம் பிறக்கும் என்பது அர்த்தம்.

விஷ்ணு பகவான் கனவில் வந்தால்

விஷ்ணு பகவானை எந்த கோலத்தில் கனவில் வந்தால், செல்வ செழிப்பு ஏற்படும். மேலும், விஷ்ணு பகவான் கருடன் மீது வருவது போன்று கனவு வந்தால், வழக்குகள் சாதகமாக முடியும்.

கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போன் கனவு வந்தால்

கோயிலுக்கு செல்ல முடியாமல் கூட்ட த்தில் மாட்டிக் கொள்வது போன்று கனவு வந்தால், சில எதிர்பார்க்காத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வீர்கள் என்று அர்த்தம்.

தனியாக இருப்பது போன்று கனவு வந்தால்

கோயிலில் நாம் மட்டும் தனியாக இருந்து கோயில் கதவு நடை சாற்றப்படுவது போன்று கனவு வந்தால், நாம் செய்து வரும் தொழில் பிரச்சனை ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.

கோயிலுக்கு செல்வது போன்று கனவு வந்தால்

கோயிலின் வாசல் கதவை திறந்து கோயிலுக்குள் செல்வது போன்று கனவு வந்தால், புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

இறைவனுக்கு மாலை சாற்றுவது போன்று கனவு வந்தால்

இறைவனுக்கு மாலை சாற்றுவது போன்று கனவு வந்தால், நல்ல வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

கோயில் கோபுரம் கனவில் வந்தால்

கோயில் கோபுரம் கனவில் வந்தால் வாழ்க்கையில் முன்னேறப் போகிறீர்கள் என்று அர்த்தம். அதோடு, உங்களது பாவங்கள் அனைத்தும் நீங்கி விட்டது என்றும் பொருள்.

கோயில் பிரசாதம் வாங்குவது போன்று கனவு வந்தால்

கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வது போன்று கனவு வந்தால் ஒரு சிலரால் மனக்கஷ்டங்கள் ஏற்படும் என்று அர்த்தம்.

கோயில் தெப்பத்தை கண்டால்

கனவில் கோயில் தெப்பத்தை கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

கடவுளிடம் பேசுவது போன்று கனவு வந்தால்

கடவுளிடம் பேசுவது போன்று கனவு வந்தால் மிகவும் நல்லது. பல நன்மைகளை பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

கனவில் காளி வந்தால்

காளி தேவியை கனவில் கண்டால் குடும்பத்தில் பல பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் வரும்.

கடவுள் விக்ரகம் கனவில் வந்தால்

கடவுள் விக்ரகத்தை கனவில் கண்டால், அந்த கடவுளை தரிசனம் செய்வதும் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நல்லது.

கோயில் மணி கனவில் வந்தால்

கோயில் மணி கனவில் வந்தால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும். அதோடு, மணி அடிப்பது போன்று தெரிந்தால் பொருள் வரவு இருக்கும் என்பது அர்த்தம்.

அய்யனார் கனவில் வந்தால்

அய்யனார் கனவில் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

நவகிரகங்கள் கனவில் வந்தால்

நவகிரகங்கள் கனவில் வந்தால் அருகிலுள்ள நவக்கிரக கோயிலுக்கு சென்று 9 முறை சுற்றி வர வேண்டும்.

யானை துரத்துவது போன்று கனவு வந்தால்

யானை உங்களை துரத்துவது போன்று கனவு வந்தால் விநாயகப் பெருமானுக்கு நேர்த்தி கடன் செய்ய வேண்டும் என்று அர்த்தமாகும்.

யானை ஆசிர்வாதம் செய்வது போல் கனவு வந்தால்

யானை உங்களை ஆசிர்வாதம் செய்வது போன்று கனவு வந்தால் உங்களது அனைத்து காரியங்களும் வெற்றியடையும்.