கருடபுராணம் கூறும் உண்மைகள் என்னென்ன? – பகுதி 2!

48

கருடபுராணம் கூறும் உண்மைகள் என்னென்ன? – பகுதி 2!

 1. பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்
 2. பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.
 3. நீர் நிலைகளை சீர்திருத்துபவரும்,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.
 4. பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்கள்.
 5. புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபதத்திலிருப்பான்.
 6. தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
 7. பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.
 8. தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.
 9. சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.
 10. ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்.
 11. அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்.
 12. விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்.
 13. சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.
 14. ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.
 15. இதைப் படிப்பவரும், கேட்பவரும்,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் பரமபதத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.
 16. அஸ்வமேத யாகம் செய்தால் இந்திய பதவி அடைவார்கள்.
 17. லோக ஷேமத்திற்காக யாகங்கள் ஹோமங்கள் செய்தவர்கள் ரிஷிகள் மற்றும் முனிவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று வைகுண்டம் அடைவார்கள்.
 18. கல்வி தானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள் ப்ரம்மலோகத்தில் வாழ்வார்கள்.
 19. பறவைகளை காப்பாற்றியவர்கள் கருடனின் ஆசிர்வாதம் பெற்று வைகுண்டம் அடைவார்கள்.
 20. விலங்குகளை காப்பாற்றியவர்கள் நந்தி தேவரின் ஆசிர்வாதம் பெற்று சிவலோகம் அடைவார்கள்.
 21. தெய்வங்களின் பாடல்களை மனதார சதா சர்வ காலமும் பாடுபவர்கள் உபன்யாசம் செய்பவர்கள் பகவானுடன் ஐய்க்கியமாகி விடுவார்கள்.

எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ள வேதம் அறிந்த ஸத் ப்ராம்மணர்களுக்கு தானம் செய்தால் அந்தந்த சுகத்தை கண்டிப்பாக அடைவார்கள்.