கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு செல்ல காரணம் என்ன தெரியுமா?

150

கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு செல்ல காரணம் என்ன தெரியுமா?

காலங்காலமாக கர்ப்பிணிப் பெண்கள் தங்களது முதல் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு செல்லும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த வழக்கம் ஏன் வந்தது? எதற்காக வந்தது? என்று நம்மில் பலருக்கு தெரியாது. வளைகாப்பு முடிந்த உடன் கர்ப்பிணிப் பெண்கள் சுகப் பிரசவத்திற்கு தங்களது அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம். அது எதற்காக என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

நிலத்துக்கும், கடலுக்கும் உள்ள தொடர்பை ஏற்படுத்தி தரக்கூடிய உயிரினம் ஆமை. இந்த ஆமைகளில் இரு வகை உண்டு. ஒன்று நிலத்தில் வாழும். இவைகளுக்கு கால்கள் இருக்கும். மற்றொன்று கடலில் வாழும். இந்த வகை ஆமைகளுக்கு கால்கள் கிடையாது. இறக்கைகள் மட்டுமே இருக்கும். இவை சாதுவான குணம் கொண்டவை.

பருவ நிலை அதான் காலநிலையைப் பொறுத்து கடலின் நீரோட்டமானது மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஆமைகள் ஒரு சில பருவ காலத்தில் மட்டும் தனது இறையைத் தேடி கடலுக்குள் நீண்ட தூரம் பயணம் செய்யும். அப்படி பயணம் செய்யும் போது இந்த வகை ஆமைகள் இறக்கைகள் இருந்தும் நீந்துவது கிடையாது. ஏனென்றால், கடலின் நீரோட்டத்தின் மூலமாக தன்னை இணைத்துக் கொண்டு தானாக செல்லும். எப்படி என்றால், நீர் போகும் திசையில் ஆமைகளும் செல்லும்.

அப்படி செல்லும் ஆமைகளின் மீது RFIF என்ற செயற்கைக்கோள் சாதனத்தை பொருத்தி இதன் மூலமாக ஆமைகள் சென்ற வழியை பின் தொடர்ந்து, கடல் வழி மார்க்கம் மூலமாக பல நாடுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா, ரஷ்யா, மலேசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருக்கும் கடற்கரை துறைமுகங்கள் ஆமைகளின் கால் தடம் பட்ட இடங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இந்த கடல் வழி மார்க்கத்தை கண்டுபிடிப்பதற்கு முன்னதாக, இந்த கடல் வழி இடங்களில் சென்று தமிழர்கள் வாணிபம் செய்துள்ளனர். என்ன ஆதாரம் என்று கேட்டால், , இந்த ஆமைகளை வைத்து கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யா, மலேசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பெயர்கள், நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் தமிழர்களின் பண்பாடு மற்றும் தமிழ் கலந்துள்ளது என்பதும் அவர்களின் கண்டுபிடிப்பு.

இந்த வகையான ஆமைகள் எப்போதும் தான் பிறந்த இடத்தை மறக்காது. இந்த ஆமைகள் ஒரு சில பருவ காலத்தில் மட்டும் தனது இறையைத் தேடி கடலுக்குள் நீண்ட தூரம் பயணம் செய்யும். அப்படி பயணம் செய்தாலும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக நீரோட்டத்தை தனது நினைவில் வைத்துக் கொண்டு தான் பிறந்த இடத்திற்கே மீண்டும் வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது இந்த கடல் ஆமையின் குணம்.

இதன் மூலமாக தமிழர்களும் பிரசவத்திற்கு தங்களது தாய் வீட்டிற்கு வர வேண்டும் என்ற ஒரு வழக்கத்தை கொண்டு வந்துள்ளதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. பிரசவ காலங்களில் பெண்கள் தங்களது தாய் வீட்டிற்கு செல்வதற்கு இந்த கடல்வாழ் ஆமைகளின் குணமும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் பெசன்ட் நகர் என்று சொல்லப்படும் பகுதியில் தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆமைகள் வந்து முட்டையிடும் ஒரு ஊராக இருந்துள்ளது. அதுவும், அந்த ஊருக்கு ஆமையூர் என்று பெயர் இருந்துள்ளது என்று வரலாற்று குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. அடையார் ஆறு கடலில் கடக்கக் கூடிய இந்த ஆமையூர் தான் தற்போது திருவான்மியூர் என்று அழைக்கப்படுகிறது.