கவலைகள் நீங்க மஹா விஷ்ணு வழிபாடு!

119

கவலைகள் நீங்க மஹா விஷ்ணு வழிபாடு!

தீயவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கும் கடவுளாக மஹா விஷ்ணு திகழ்கிறார்.

என்னதான் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருந்தாலும், மகிழ்ச்சியோடும், மன நிம்மதியோடும் யார் வாழ்கிறார்களோ அவர்களது வாழ்க்கை சிறந்த வாழ்க்கை ஆகும். எல்லோரது வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்க அருள் புரியும் இறைவன், மஹா விஷ்ணு.

ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மஹா விஷ்ணுவிற்கு பூஜை செய்து வழிபட்டு வர மகிழ்ச்சி மட்டுமின்றி வாழ்க்கையில் செல்வம், பேர், புகழ் கிடைக்கும்.

மஹா விஷ்ணு பூஜை:

நாழி முழுவதும் நெல், வாசனை திரவியங்கள், துளசி தளம், இனிப்பு வகைகள், பால், தேன், இளநீர், துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பௌர்ணமியன்று, வீட்டை சுத்தம் செய்து கிழக்கு பார்த்தவாறு ஒரு பீடம் அமைக்க வேண்டும். அதில், துளசி தளம் கொண்டு நிரப்பி அதன் மீது நாழி முழுவதும் நெல் நிரப்பியதை வைக்க வேண்டும்.

அதன் பின்பு துளசியால் நாழி முழுவதும் அலங்காரம் செய்து, மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். அதற்கு அருகில் தீபம் ஏற்றி வைத்து சாணம் அல்லது மஞ்சள் தூள் ஆகியவற்றால் செய்த அருகம்புல் விநாயகரை வைக்க வேண்டும்.

அதன் பிறகு குடும்பத்தில் பெரியவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் பூஜை செய்ய வேண்டும். முதலில் விநாயகரை பூஜித்துவிட்டு அதன் பிறகுநிறை நாழியில் உள்ள மஹா விஷ்ணுவிற்கு பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும்.

அப்போது, மஹா விஷ்ணுக்குரிய மந்திரம் சொல்லி வழிபட வேண்டும். இப்படி ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மஹா விஷ்ணுவை வழிபட்டு வர மன மகிழ்ச்சி, மன நிம்மதி, செல்வம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.