காகம் சகுனம் சொல்லுமா?

90

காகம் சகுனம் சொல்லுமா?

காகத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. இந்த காகத்தை குறித்து நமக்கு தெரிந்தது ‘காகம் கரையும்’ என்பது தான். மேலும் சிலருக்கு விருந்தினர்கள் வருவார்கள் என்றால் காகம் கரையும் என்பதும் தெரியும்.

ஆனால் இந்த காகங்கள் நாம் அறிந்திராத பல சகுனங்களை சொல்கிறது. இந்த சகுனங்களை குறித்து இந்த பதிவில் பார்ப்போம். காரணமின்றி நன்கு சத்தமிட்டு ஒலியெழுப்பும் காகம் பஞ்சம் வரப் போவதை சகுனமாக அறிவிக்கும்.

காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையை அறிவிக்கும். இரவில் அசாதாராணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதை சகுனமாக அறிவிக்கும்.

காகம் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, தங்கத்தால் லாபம், நண்பர்கள், நல்ல உணவு கிடைக்கும். மரங்களில் காகம் கூடு கட்டுவது பார்த்தால் நல்ல பலனையும் பட்டுப்போன அல்லது எரிந்துபோன மரங்களில் கூடு கட்டுவது வரப்போகும் துன்பத்தையும் காட்டும்.

பால் உள்ள மரங்கள் மற்றும் ஆற்றோரங்களில் இருந்து மழைக்காலங்களில் காகம் கரைவது, நல்ல மழை பெய்யும் என்பதற்கான சகுனம். மற்ற காலங்களில் இவ்வாறு காகம் கரைந்தால், மழை மேகங்கள் வந்துபோகும் மழை பெய்யாது. நீர் நிலைகளைப் பார்த்துக் காகம் கரைவதும், தண்ணீரில் காகம் தன் தலையை போடுவதும் நல்ல மழைக்கான அறிகுறிகளாகும். மற்ற காலங்களில் இவ்வாறு செய்வது தீமையை ஏற்படுத்தும்.

நாம் எங்கேயாவது பயணம் புறப்படும்போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொத்தி கொண்டு வருகிறதோ அந்தப் பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக வெண்மை நிற பொருள் வெள்ளி லாபத்தையும், சிவப்பு நிறப்பொருள் தங்கம் வகையிலான லாபத்தையும், பஞ்சு போன்றவை துணி லாபத்தையும் குறிக்கும்.

இந்த பொருட்களை எல்லாம் அந்த இடத்திலிருந்து காகம் எடுத்துச்செல்வதுபோல் கண்டால் வழிகளில் நஷ்டம் உருவாகும். பயணம் புறப்படும் போது காகம் வலப்புறத்திலிருந்து இடது புறம் போவது தனக்கு லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தனக்கு நஷ்டத்தையும் உண்டாக்கும்.

பயணிக்கும் நபரை நோக்கி காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும் என்று அர்த்தம். ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிப்பதை பார்த்தல் பயணம் நன்மையானதாக மாறும்.

பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால் அந்த பயணத்தால் பலவிதமாக லாபம் ஏற்படும். பயணத்தின்போது ஒரு நபரது உடல், வாகனம், குடை, காலணி ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால் பயணத்தின்போது அவருக்கு மரணம் நேரிடலாம்.

பயணத்தின்போது வாகனம், குடை, காலணி ஆகியவற்றின் மீது எச்சம் இட்டால் உணவுக்குப் பஞ்சம் ஏற்படாது. ஒரு பெண் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால் லாபம் மற்றும் பெண்களால் நன்மை ஏற்படும்.

தன் குஞ்சுகளுடன் கூட்டில் வசிக்கும் காகத்தை பார்த்தால் நன்மை ஏற்படும். முட்டையைக் கீழே தள்ளி உடைக்கும் காகத்தை பார்த்தால் தீமை ஏற்படும். ஆழ்ந்த கருமை நிறமுள்ள காகத்தைக் கண்டால், திருடர் பயம் உருவாகும். ஒருவரின் மேலே காகம் உரசி சென்றால் அவருக்கு உடல் உபாதை ஏற்படுவதை குறிக்கும்.

காகங்கள் கூட்டமாக ஒரு ஊரின் மேலாகப் பறப்பது அவ்வூருக்கு ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைக் குறிக்கும். பூக்கள், பழங்கள் அல்லது ரத்தினக் கற்களை ஒரு வீட்டில் காகம் கொண்டு போட, அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும்.

கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண் குழந்தை பிறக்கும். பூக்கள், காய்கனிகள், மணல், தானிய வகைகள், ஈரமான மண் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்த பொருளின் வகையில் லாபம் ஏற்படும்.

ட்டிலுள்ள பாத்திரங்களைக் காகம் எடுத்து செல்வது தீமையை ஏற்படுத்தும். சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும் , சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், நெருப்பினால் துன்பம் ஏற்படும்.