காஞ்சி காமாட்சி அஷ்டகத்தை பாராயனம் செய்தால் வராமல் போன கடனும் வந்துவிடும்!

19

காஞ்சி காமாட்சி அஷ்டகத்தை பாராயனம் செய்தால் வராமல் போன கடனும் வந்துவிடும்!

உலக அன்னையான தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று. காஞ்சி என்றாலே காமாட்சிதான். `கா’ என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பண்டாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காகவே அவதரித்தவள் காமாட்சி அம்மன். பண்டாசுரனை வதம் செய்த உக்கிரத்துடன் திகழ்ந்த அம்மனின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினார்.

அம்பிகையின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஶ்ரீசக்ரத்தில், `ஶ்ரீ என்பது லட்சுமியின் அம்சமாகும். எனவே, காமாட்சி அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பதுடன், மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல் போன கடன்களும் வந்துவிடும் என்பது  நம்பிக்கை.

துக்க நிவாரண அஷ்டகம்:

மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே

சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே

கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே

ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

கான் உறுமலர் எனக் கதிர் ஒளிகாட்டிக் காத்திட வந்திடுவாள்.

தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்

மான் ஊறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்

ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே

பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே

எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே

ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்

கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்

பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்

ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே

கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே

சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எனும் மாயே

ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே

பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்

கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே

ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்

சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுபாய்

படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்

ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி

ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெயஸ்ரீதேவி

ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெயஸ்ரீதேவி

ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

பொருள்:

வாட்டி வருத்தும் தொல்லைகள் இனிமேல் இல்லை என்ற ஆறுதலான உன் அமுத மொழியை எனக்குக் கூறிடுவாய் அம்மா. சுடர் போன்ற ஒளி பொருந்திய அமுதம் போன்றவளே, உன் இனிய மொழியால் ஆறுதல் அளித்து எனக்கு சுகத்தை அளிப்பாய். என்னை வாட்டும் வினைகளை இருட்டில் ஒளிபோல் வந்துப் பொசுக்கி விரட்டிடம்மா. சங்கரி, கௌரி, க்ருபாகரி, சர்வ துக்க நிவாரணியான காமாட்சியே, எனக்குத் திருவருள் புரிவாய் அம்மா.