காஞ்சி பெரியவரின் 10 கட்டளைகள் என்னென்ன தெரியுமா?

89

காஞ்சி பெரியவரின் 10 கட்டளைகள் என்னென்ன தெரியுமா?

  1. காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  2. அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக்கொள்ள வேண்டும்.
  3. அடுத்து புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும்.
  4. வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபட வேண்டும்.
  5. உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.
  6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிட வேண்டும்.
  7. அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தர்மம் செய்ய வேண்டும்.
  8. நெற்றியில் தவறாது திலகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
  9. உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது கெட்டதுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.
  10. ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு தூங்க செல்ல வேண்டும்.