காலண்டரில் இருக்கும் சாமி படங்களை என்ன செய்வது?

84

பழைய காலண்டரில் இருக்கும் சாமி படங்களை என்ன செய்யலாம்?

பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே இறை பக்தி இருக்கும். பக்தி அதிகமாக இருப்பவர்களுக்கு காலண்டரில் இருக்கும் சாமி படங்களை பூஜையறையில் வைத்தும், வண்டி வாகனங்களில் வைத்தும் வழிபட்டு வருகிறார்கள். பழைய காலண்டரில் மட்டுமல்லாமல், திருமண பத்திரிக்கை, நோட் புக், டைரி என்று பலவற்றிலும் சாமி படம் இருக்கும். இப்படி காலண்டர், திருமண பத்திரிக்கை என்று பலவற்றில் அச்சிடப்பட்டிருக்கும் சாமி படங்களை என்ன செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

காலண்டரில் பெரும்பாலும் அருணாச்சல ஈஸ்வரர், மகாலட்சுமி, விநாயகர், முருகன், சாய் பாபா, ஐயப்பன், பெருமாள் போன்ற படங்கள் தான் இருக்கும். தினசரி காலண்டர், மாத காலண்டர் என்று பலவற்றிலும் சாமி படங்கள் இருப்பதைத் தான் நாம் வாங்கி வருவோம். ஒரு சிலரது வீடுகளில் தினசரி காலண்டர்கள் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கும். தினசரி காலண்டரை பார்க்கும் பொழுது நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

ஆனால், வருடம் முடிந்த பிறகு அந்த காலண்டரை என்ன செய்வது என்று தெரியாது. வருடந்தோறும் இது போன்ற காலண்டர்கள் வாங்கி வாங்கி வீட்டில் குவித்து தான் வைப்போம். குப்பையில் போடவும் மனது வராது. ஒரு சிலர் பேப்பர் கடையில் எடைக்கு போட்டு விடுவார்கள். அட்டை என்பதால் வெயிட் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கூடுதல் பைசா தருவார்கள் என்று எடைக்கு போடுவார்கள். இன்னும் சிலர் அப்படியே குப்பையில் போடுவார்கள். இன்னும் ஒரு சிலரது வீடுகளில் தாயம் விளையாடுவதற்கு கட்டம் வரைந்து பயன்படுத்துவார்கள்.

ஆனால், சாமி உருவம் கொண்ட காலண்டரை என்ன செய்வது என்பது யாருக்குமே தெரியாது. எங்கும் இருப்பவர், எதிலும் இருப்பவர் இறைவன். பக்தி மனதில் இருந்தால் போதும். இரக்கம் உள்ள மனிதர்களிடம் எப்போதும் இறைவன் குடி கொண்டிருப்பார். ஆகையால், உங்களுக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், காலண்டர், நோட்டுப் புத்தகம், திருமண பத்திரிக்கை, நோட்டீஸ், பழைய படங்கள் என்று எதுவாக இருந்தாலும் அதையெல்லாம் மொத்தமாக எடுத்துக் கொண்டு ஓடும் நீரில் விட்டு விடுங்கள்.

ஓடும் நீர் என்பது ஒரு விஷயத்தை அழிக்கவும், ஆக்கவும் செய்யக் கூடிய ஆற்றல் கொண்டிருக்கிறது. அதனால், தான் எப்போதும் எந்தவொரு ஆன்மீக காரியங்களுக்கு எல்லாம் ஓடும் நீரை பயன்படுத்துகிறார்கள். எனவே, பழைய சாமி படங்கள், காலண்டரில் உள்ள சாமி படங்கள், திருமண பத்திரிக்கையில் உள்ள சாமி படங்கள், உடைந்த படங்கள் என்று எதுவாக இருந்தாலும் அதனை எடுத்துச் சென்றும் ஓடும் நீர் நிலைகளில் விட்டு விடுங்கள்.