குங்குமத்தை கீழே கொட்டினால் அவசகுணமா?

132

குங்குமம் கொட்டுவது நல்லதா? கெட்டதா?

பொதுவாக வீட்டில் பூனை குறுக்கே சென்றாலோ, குங்குமம் கொட்டினாலோ, விளக்கு அணைந்தாலோ, தாலி கழண்டு விழுந்தாலோ, மெட்டி காணாமல் போனாலோ, கோயிலில் வாங்கும் பிரசாதம் தவறி விழுந்தாலோ அபசகுணம் என்று கூறுகிறோம். ஆனால், உண்மையில் இதெல்லாம் நமது அஜாக்கிரதையால் நடக்கக் கூடியவை. தாலி மற்றும் மெட்டி கழண்டு விழுந்து மாயமாவதால் ஆபத்து எதுவும் நடக்காது. கணவரின் மாங்கல்ய பாக்கியம் அதிகமாகும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

கிரக தோஷம் நீங்கும்:

குங்குமம் மற்றும் விபூதி கொட்டுவது, தாலி கழண்டு விழுவது, மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்றவை நல்ல சகுனம். இதன் விளைவாக மாங்கல்ய பலம் அதிகரிக்குமே தவிர, எந்த கணவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ எந்த பாதிப்பும் வராது. விபத்திலிருந்து தப்பித்தல், பாம்பு கடிப்பது போன்று கனவு, வீட்டு பூஜையறையில் விளக்கு தவறி கீழே விழுதல் போன்றவைகளால் கிரக தோஷங்களால் நமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நீங்குவது என்று அர்த்தமாம்

கல் உப்பு போட்டு வீட்டை சுத்தம் செய்தல்:

பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் வீட்டை சுத்தம் செய்யும் போது சிறிது கல் உப்பு போட்டு சுத்தம் செய்தால் கண் திருஷ்டி குறையும் என்பது நம்பிக்கை.

விளக்கெண்ணெய் தீபம்:

வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தான் நல்லது. அதோடு, ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 2 விளக்குகள் இருக்க வேண்டுமாம். ஒரு விளக்கு அதான் குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், அதற்கு துணை விளக்கு வடக்கு முகமாகவும் பார்த்து இருக்க வேண்டும். எந்த விளக்காக இருந்தாலும் சரியும் போது அதனை பூக்கள் கொண்டே அணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.