குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?

100

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?

பொதுவாக திருமணமான சுமங்கலி பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்று கூறுவார்கள். அது ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம். சுமங்கலி பெண்களின் சக்தி அவர்கள் இட்டுக் கொள்ளும் குங்குமத்தில் இருக்கிறது.

 1. வீட்டிற்கு வரும் சுங்கலி பெண்களுக்கு குங்குமம் கொடுப்பது, அதனை தருபவருக்கும், பெறுபவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
 2. முதலில் பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் வீட்டிற்கு வரும் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
 3. அம்பிகையின் வகிட்டில் இருக்கும் குங்குமம், பக்தர்களுக்கு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
 4. எப்போதுமே குங்குமம் நல்ல ஆரோக்கியமான எண்ணங்களையும், நினைவுகளையும் கொடுக்கும். ஆனால், குங்குமம் வைத்திருக்கும் யாரையும் வசியம் செய்ய முடியாது.
 5. குங்குமம் அரக்கு நிறத்தில் இருந்தால் அது சிவ சக்தியை குறிக்கும். அதே போன்று திருமணப் புடவையும் அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
 6. முகம், மனம் மற்றும் உடல் ஆகியவற்றிற்கு குங்குமம் மருத்துவத்தன்மை, தெய்வீகத்தன்மையை கொடுக்கும்.
 7. சுமங்கலி பெண்கள் நெற்றியின் நடுவிலும், வகிட்டின் நுனி தொடக்கத்திலும் குங்குமம் இட்டுக் கொள்வது சிறப்பு வாய்ந்தது.
 8. கட்டவிரலால் குங்குமம் எடுத்து வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
 9. இதே போன்று ஆள்காட்டி விரலால் குங்குமம் எடுத்து வைத்துக் கொண்டால், நிர்வாகம், ஆளுமைத்தன்மை ஆகியவை அதிகரிக்கும்.
 10. நடுவிரலால் குங்குமம் வைக்கும் போது தீர்க்கமான ஆயுளைக் கொடுக்கும்.
 11. ஆண்கள் இருபுருவங்களுக்கு இடையில் குங்குமம் வைக்கும் அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.