குறவன் மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கும் சகுனி கோயில்!

69

குறவன் மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கும் சகுனி கோயில்!

மகாபாரதம் என்பது நம் பாரதத்தின் ஒரு ஒப்பற்ற காப்பியம். தலைமுறைகள் தாண்டி நிற்கும் தலைச்சிறந்த ஓர் படைப்பு. இதில் மகாபாரதம் என்றாலே கிருஷ்ணன், அர்ஜூனன், பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன், கர்ணன் இவர்களை குறித்து பல கதைகள், போதனைகள் சொல்லப்படுவதுண்டு.

கதையின் நாயகர்கள் குறித்து பேசப்படும் அதே வேளையில் நம் காப்பியங்களில் வரும் எதிரிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இடாய் அவர்களும் பலம் மிக்கவர்களாகவே இருந்திருக்கின்றனர். அந்த வகையில் சகுனி குறித்து மகாபாரதம் சொல்லும் பல கதைகளை நாம் அறிவோம். அதே சகுனிக்கு கோயில் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் இந்த சகுனி கோயில் அமைந்துள்ளது.இதனை நேர்மறை குணத்திற்கு முன்னுதாரணமாக’ வணங்குகிறார்கள். மகாபாரதத்தின் மிகவும் தந்திரமான கதாபாத்திரம் சகுனி. கௌரவர்களின் தாய்மாமனான சகுனி எண்ணற்ற தீய காரியங்களைச் செய்தார். பின்பு அவருக்கு ஏன் கோயில் அமைத்திருக்கிறார்கள் என்று அனைவருக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

ஆனால் சனாதன தர்மத்தின் படி அவரிடமும் சில ‘சாத்விக்’ (நேர்மறை) கூறுகள் இருந்தது. உண்மையில் சகுனியின் கோபம் என்பது பாண்டவர்கள் மீது அல்ல, இருளை கண்டு அஞ்சுகிற தன் தங்கைக்கு கண் பார்வை அற்ற வரனை அமைத்த பீஷ்மர் மீதே அவர் முதல் கோபம் பதிந்துள்ளது.

குறவர் இனமக்களின் இஷ்ட தெய்வமாக சகுனி இருக்கிறது. இந்த இடத்தில் தான் சகுனிக்கு மோட்சம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் நாடு முழுவதும் பயணித்ததாகவும், அப்படி பயணிக்கும் போது இந்த இடத்தில் தங்களுடைய ஆயுதங்களை பகிர்ந்து கொண்டதால், இந்த இடத்திற்கு பகுதீஸ்வரம் என்ற பெயர் வந்திருக்கிறது.

காலப்போக்கில் இது பவித்தீஸ்வரம் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்த கோயிலில் எந்த விதமான பூஜைகளோ சடங்கு சம்பிரதாயங்களோ நடப்பதில்லை சகுனிக்கு இளநீர், வேட்டி, பட்டு போன்றவை காணிக்கையாக வைக்கப்படுகிறது. இன்றைக்கும் அந்த கோயிலை குறவர் இன மக்கள் தான் பராமரித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.