குழந்தைகள் நன்றாக சாப்பிட அன்னபூரணி வழிபாடு!

92

குழந்தைகள் நன்றாக சாப்பிட அன்னபூரணி வழிபாடு!

சிறு குழந்தைகள் சாப்பாடு சரியாக சாப்பிடுவதில்லை. அதற்கு காரணம், விளையாட்டுத்தனம் அதிகமாக இருக்கும். அதோடு, வளர்ந்து வரும் குழந்தைகள் என்பதால், அவர்களுக்கு நொறுக்குத்தீணி மீது அதிக ஆர்வம் இருக்கும். அப்படியிருக்கும் குழந்தைகள் சாப்பாடு சரிவர உண்பதில்லை. இதற்கு அன்னபூரணியை வழிபட வேண்டும்.

குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது சாப்பிடாது. அதைப் பார்த்து பெற்றோர்கள் வருத்தப்படுவர். இல்லையென்றால், மருத்துவரிடம் அழைத்துச் சென்று வைத்தியம் பார்ப்பார்கள். சில குழந்தைகள் மிட்டாய், ரொட்டி, இனிப்புப் பொருட்களை மட்டுமே சாப்பிடுவார்கள்.

சோறு ஊட்டும் பொழுது, சாப்பிடாமல் ஒதுக்கும் குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்ணவும் உடல் அமைப்பு திடகாத்திடமாக இருக்கவும் அன்னபூரணியை வழிபட வேண்டும். தினந்தோரும் குழந்தையின் கையால் ஒரு பிடி அரிசியை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் அன்னபூரணி படத்தின் முன்பாக அந்த அரிசியை சேர்த்து வைக்க வேண்டும்.

அப்படி ஒரு மண்டலம் வரை அரிசியை சேர்த்து வைக்க வேண்டும். அதன் பிறகு, அந்த அரிசியுடன் நாமும் கொஞ்சம் அரிசியை சேர்த்து ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி குழந்தையின் எடைக்கு எடை வெல்லம், பச்சரிசி கொடுக்க வேண்டும். இதனை குருவாயூர் மற்றும் நின்ற கோலத்து விஷ்ணு கோயிலுக்கு சென்று செய்ய வேண்டும். இறைவனை வழிபட்டு நான் கொடுக்கும் எந்த உணவையும் குழந்தைகள் ரசித்து உண்பார்கள்.