குழந்தை பாக்கியம் அருளும் கிருபாகூபாரேச்வரர்!

80

குழந்தை பாக்கியம் அருளும் கிருபாகூபாரேச்வரர்!

நாகபட்டிணம் மாவட்டம் கோமல் என்ற ஊரில் உள்ளது கிருபாகூபாரேச்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக கிருபாகூபாரேச்வரர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தாயார், அன்னபூரணி. இந்தக் கோயிலில் மூலவரான கிருபாகூபாரேச்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

ஆடை, ஆபரணங்கள் மீது பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுபவர்கள். நாட்டியம், சங்கீதம் ஆகிய கலைகளின் மீது நாட்டம் இருக்கும். வாயாடியாக திகழ்வீர்கள். தாயாரது மீது அதிக அன்பு கொண்டிருப்பீர்கள். யாரிடமும் எளிதில் பழகும் குணம் கொண்டவர்கள்.

பார்வதி பசுவாக மாறி இங்கு வழிபாடு செய்ததால் இத்தலம் கோபுரி என்றும், கோமல் என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் விநாயகர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

அஸ்தம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது தோஷங்கள் நீங்க கிருபாகூபாரேச்வரரை வழிபாடு செய்கின்றனர். திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். பசு மற்றும் கன்றுடன் இந்தக் கோயிலுக்கு வந்து பக்தர்கள் வலம் வருகின்றனர்.

தல பெருமை:

அஸ்தம் நட்சத்திர பலன்:

அஸ்தம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள், அஸ்தம் நட்சத்திர நாளில் அல்லது தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது சிறப்பு. எந்த வகையான தவறாக இருந்தாலும் அதற்கு மன்னிப்பு தரக்கூடியவர் கிருபா கூபாரேசுவரர். சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவரும் அரூப வடிவில் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த ராசிக்காரர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு என்று நைவேத்தியம் செய்து கிருபா கூபாரேசுவரர் மற்றும் அன்னபூரணியை வழிபட்டு வலம் வர இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும். நல்வாழ்க்கை அமைய வேண்டுபவர்களும், கலங்கிய மனமுள்ளவர்களும் வாரத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இந்த கோயிலில் உள்ள கிருபா கூபாரேசுவர்ரை வழிபாடு செய்வது நன்மை உண்டாகும்.

தல வரலாறு:

சிவபெருமானின் திருவிளையாடல் பற்றி அறிந்து கொள்ள பார்வதி தேதி விரும்பினார். அதோடு, எப்படி இந்த உலகை இயக்குகிறார் என்பது குறித்தும் அவரிடமே கேட்டார். அப்போது, சிவபெருமான் தனது திருவிளையாடலை பார்வதி தேதியிடம் காண்பித்தார். அதுதான், பார்வதி தேதி, தனது கண்ணை கட்டும்படி செய்தார். அந்த நொடியே, உலகம் இருண்டு போனது.

இதனால், அதிர்ந்து போன பார்வதி தேதி, தனது தவறை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்பு கோரினார். எனினும், தவறுக்காக ஆத்திரமடைந்த சிவபெருமான், என் கரத்திலிருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப் போகிறேன். நீ பசுவாக மாறி நான் இருக்கும் இடமான இந்த ஜோதியைக் கண்டுபிடித்து அங்கு வந்து சேர்வாய் என்று கூறி மறைந்தார்.

சிவன் கூறியதைப் போன்று பசுவாக மாறி தனது சகோதரரான திருமாலுடன் சிவஜோதியைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தார். அப்போது ஒரு நாள் அஸ்தம் நட்சத்திர நாளில் சிவஜோதி தோன்றியது. இதைக் கண்ட பார்வதி தேவி மனமகிழ்ந்து சிவஜோதியுடன் ஐக்கியமானார். பார்வதி மீது கிருபை காட்டிய சிவபெருமான் கிருபா கூபாரேச்வரர் என்று பெயர் வந்தது.