குழந்தை பாக்கியம் கிடைக்க விஜயலட்சுமி வழிபாடு!

219

குழந்தை பாக்கியம் கிடைக்க விஜயலட்சுமி வழிபாடு!

பெசன்ட் நகர் பகுதியில் உள்ளது அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. கடல் அருகே அமைந்துள்ள இந்த கோயிலில் மூலவராக அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, தான்யலட்சுமி, ஆதிலட்சுமி மற்றும் மகாவிஷ்ணு ஆகியோர் உள்ளனர். மேலும், தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி மற்றும் தனலட்சுமி என்று தாயார் உள்ளனர்.

அஷ்டலட்சுமிகள் அனைவரும் இந்த கோயிலில் தனித்தனி சன்னதிகளில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தாயார் 9 கஜம் புடவையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு இந்தக் கோயில் கட்டப்பட்டது. கடலோரம் அமைந்துள்ள கோயில் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தொடர்ந்து பக்தர்களின் வருகை காரணமாக இந்தக் கோயில் சென்னையில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் ஊரிலுள்ள பெருமாள் கோயிலைப் போன்று இந்தக் கோயிலும் பல அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது.

ஆறுகால பூஜை இந்த கோயிலில் நடத்தப்படுகிறது. அதோடு, நெய் விளக்குகள் மட்டுமே இந்த கோயிலில் ஏற்றப்படுகிறது. இந்த கோயிலில் அஷ்டலட்சுமிகளாக அருள் தரும் மகாலட்சுமியை வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை அமையப் பெறலாம்.

  1. தைரியம் பெற தைரியலட்சுமியை வழிபட வேண்டும்.
  2. குழந்தை பாக்கியம் கிடைக்க விஜயலட்சுமியை வணங்க வேண்டும்.
  3. கல்வி ஞானம் பெறுவதற்கு வித்யாலட்சுமியை வழிபட வேண்டும்.
  4. செல்வம் பெருகுவதற்கு சந்தானலட்சுமியை வணங்க வேண்டும்.
  5. உடல் நலம் பெற்று சிறப்பாக வாழ ஆதிலட்சுமியை வழிபட வேண்டும்.
  6. பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியை வணங்குதல் வேண்டும்.
  7. சகல சௌபாக்கியங்களும் பெற கஜலட்சுமியை வழிபடுதல் சிறப்பு.

வேண்டும் வரம் கிடைக்க புடவை சாற்றியும், பிரசாதம் வழங்கியும் பக்தர்கள் அஷ்டலட்சுமிகளை வழிபடுகின்றனர். இந்த கோயில் கோபுரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், கோபுரத்தின் நிழலானது பூமியில் விழாது. இதற்கு ஓம்கார சேத்திரம் என்று பெயர். கோபுரத்தில் ஓம்கார வடிவில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இது தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் சிறப்பை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.