குழந்தை பாக்கியம் கிடைக்க அட்‌சயபுரீஸ்வரர் வழிபாடு!

33

குழந்தை பாக்கியம் கிடைக்க அட்‌சயபுரீஸ்வரர் வழிபாடு!

தஞ்சாவூர் மாவட்டம் விளங்குளம் பகுதியில் உள்ள கோயில் அட்சயபுரீஸ்வரர். இந்தக் கோயிலில் அட்சயபுரீஸ்வரர் மூலவராகவும், தாயார் அபிவிருத்தி நாயகியும் காட்சி தருகின்றனர். சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மந்தா, ஜேஷ்டா மனைவியருடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கோயில் பிரகார்த்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், மந்தா, ஜேஷ்டா ஆகிய இரு மனைவியருடன் சனீஸ்வர பகவான், சூரியன், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, கஜலட்சுமி, நாகர், நடராஜர் சன்னதிகள் உள்ளன.

பூசம் நட்சத்திரக்காரர்களின் குணம்:

எப்போதும், பெரியவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பார்கள். மனதில் தெய்வபக்தி மேலோங்கியிருக்கும். மற்றவர்களிடம் அன்பாக பழகுவீர்கள். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பார்கள். எடுத்த காரியத்தை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இவர்களுக்கு இருக்கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வீர்கள்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனான அட்சயபுரீஸ்வரரை வழிபாடு செய்கின்றனர். உடல் ஊனமுற்றவர்கள், கால் வலி பிரச்சனை உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இந்தக் கோயிலில் உள்ள இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

பூசம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் நல்லெண்ணெய், இளநீர், சந்தனம், தேன், புனுகு, பஞ்சாமிர்தம், பால், தயிர், ஆகிய 8 வகையான பொருட்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம்.

தல பெருமை:

பூச பத நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரை குறிக்கும். சனி பகவான் தனது பாத குறைபாடு நீங்க இத்தல இறைவனான அட்சயபுரீஸ்வரரை வேண்டி நிவாரணம் பெற்ற தல தான் விளங்குளம். பூச நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள், பூச நட்சத்திர நாளிலோ அல்லது அட்சய திரிதியை நாளிலோ அல்லது சனிக்கிழமைகளிலோ இத்தல இறைவனை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பூசம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் நல்லெண்ணெய், இளநீர், சந்தனம், தேன், புனுகு, பஞ்சாமிர்தம், பால், தயிர், ஆகிய 8 வகையான பொருட்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். அதோடு, சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனி பகவானை வழிபட தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பது ஐதீகம்.

உடல் நல பாதிப்பு, கடன் பிரச்சனை உள்ளவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் வலி பிரச்சனை உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபடலாம்.

சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மந்தா, ஜேஷ்டா மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். இந்தக் கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்குப் பதிலாக சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

இந்தக் கோயிலில் விநாயகர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது என்பது அரிதான ஒன்று. மேற்கு நோக்கி காட்சி தரும் விநாயகரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் விஜயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், விஜய விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு:

பூச பத நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரை குறிக்கும். ஒரு முறை எமதர்மராஜன் தனது தந்தையான சனீஸ்வரரின் காலில் அடிக்கவே அது ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி பல சிவன் கோயில்களுக்கு சென்றார். அப்போது இத்தலத்துக்கு வந்த போது விளாமரவேரில் கால் தடுக்கி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். சனீஸ்வர பகவான் விழுந்த நாள் திருதியை, பூச நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த ஒரு நன்னாளாக இருந்தது.

சனீஸ்வரர் விழுந்த இடத்தில் பல காலம் மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் சனீஸ்வரருக்கு அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்தார். அதோடு, சனீஸ்வரருக்கு திருமண பாக்கியமும் அளித்தார். மேலும், சனீஸ்வரரின் கால் ஊனமும் சரியானது. விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இந்த தலம் விளங்குளம் என்றானது.