குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

83

குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் என்ற ஊரில் உள்ள கோயில் நவபாஷாண நவக்கிரக கோயில். இந்தக் கோயிலில் நவக்கிரகங்கள் மூலவராக காட்சி தருகின்றன. ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கு ராமரால் கடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவக்கிரகம் சிறப்பானது. எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் இந்தக் கோயிலில் காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் நீராடலாம் என்று சொல்லப்படுகிறது.

தென் தமிழகத்தின் கடன் சூழ்ந்த பட்டினம் தேவிபட்டினம் என்ற தேவிபுரம். ராமன் இலங்கையை அடைய பாலம் கட்டினான். இதைக் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷாணமிட்ட தலமே தேவிபட்டினம் என்றாயிற்று. முன் ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்க்கடன் தீர, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை இந்தக் கோயிலில் செய்யலாம்.

நவக்கிரக தோஷங்கள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், ஆயுள் பலம் அதிகரிக்கவும், செல்வம் பெருகவும் இந்த கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. நவதானியங்கள் படைத்தல், நவக்கிரக வலம், தானம் செய்தல், தோஷ பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து நேத்திக்கடன்களாகும்.

கடலின் நடுவே நவபாஷாணமாக அமைந்து நவக்கிரகங்கள் அமைந்து அருள்பாலிப்பது இந்தக் கோயிலின் சிறப்பாகும். மூர்த்தி, தலம், கீர்த்தி என்று எல்லாமே ஒன்றிணைந்து பேரின்ப நிலையை அளிக்கும் தலம் தான் நவபாஷாணம் ஆகும். ஸ்ரீராமபிரான் தமது கையால் 9 பிடி மணலால் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம். பிதுர் கடன் செய்பவர்கள் இந்தக் கோயிலில் தர்ப்பணம் செய்யலாம்.

அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை. ஸ்ரீ ராமபிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம். பார்வடி பரமேஸ்வரனும் ஸ்ரீ ராமபிரானுக்கு ஆசிகள் வழங்கி இத்தலத்திலேயே சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளியுள்ளார். சேது தலத்தை தரிசித்தாலே முன் கர்ம பாவங்கள் அனைத்தும் விலகி புண்ணியம் ஏற்படும்.

மகிஷாசூரன் தான் பெற்ற வரம் கொண்டு தேவலோகத்திலுள்ள தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். தேவர்களோ பராசக்தியிடம் முறையிட்டனர். இதையடுத்து, தேவர்களை காக்க பராசக்தி தேவி அசுரனுடன் யுத்தம் செய்ய வருகிறாள். இதைக் கண்ட அசுரன் பயந்து தேவிபட்டினத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான்.

தனது சக்தியால் சக்ர தீர்த்தத்தினை வற்றச் செய்து சம்ஹாரம் செய்து அவனுக்கு சாப விமோட்சனம் தருகிறாள். இதைக்கண்டு மகிழ்ந்த தேவர்கள் அமிர்தத்தை பொழிய தர்ம தேவதையும் அருள் வழங்கினாள். அன்று முதல் தேவிபுரம் தேவிபட்டினமாக வழங்கி வருகிறது.

படைக்கும் தொழில் புரியும் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து அத்தவத்தின் பலனாக தேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்ற வரத்தினை பெறுகிறான் ராவணன். ஆனால், ராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை. இதுவே ராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது.

ராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான். இதையறிந்த ராமன் சீதையை மீட்பதற்காக தென் திசை நோக்கி வந்தார். தேவ சாஸ்திரங்களில் குறிப்பிட்டது போன்று எந்தவொரு காரியம் செய்வதற்கு முன் பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்யும் வழக்கம்.

அதன்படி ராமபிரான் உப்பு படிவங்கள் நிறைந்த இட  த்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலானது.